தியானம் (மாசி 23, 2023)
ஆலயத்தைக் குறித்த எதிர்பார்ப்புக்கள்
1 கொரிந்தியர் 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவை களாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகி மைப்படுத்துங்கள்.
தேவ ஆலயத்திற்கு செல்லும் போது, ஆலயம் எப்படியாக இருக்க வேண்டும் என்றும், அங்கே எப்படிப்பட்ட காரியங்கள் நடைபெற வேண்டும் என்றும் விசுவாச மார்க்கத்தாருக்கு பல எதிர்பார்ப்புக்கள் உண்டு. அவற்றுள், ஆலயம் உள்ளும் புறமுமாக சுத்தமாக பேணப்ப ட்டிருக்க வேண்டும், ஒருமைப்பாடு, நல்லிணக்கம், ஜெப வேண்டுத ல்கள், தேவனுக்கு உகந்த துதி ஆரா தனை, வேத வார்த்தைகளின் தியானம் போன்றவைகள் உள்ளடங்கும். 'உங் கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிரு க்கிறதென்றும், நீங்கள் உங்களுடைய வர்களல்லவென்றும் அறியீர்களா? (1 கொரி 4:19). நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவ னுடைய ஆவி உங்களில் வாசமாயிரு க்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி 3:16). எனவே, முதலாவதாக, நம் ஒவ்வொருவருடைய உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். அங்கே மாம்ச இச்சை களுக்கு இடமில்லை. இருமனமில்லாதவர்களாயும், கசப்பும், வன்மமும், பகையும் இல்லாதவர்களாகவும், ஜெப வேண்டுதல்களோடும், அனுதின மும் வேத வார்த்தைகளை தியானம் செய்து, தேவனுக்கு உகந்த துதி ஆராதனை செய்கின்றவர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும். தெய்வீக சுபாவங்கள் சபைக் கட்டிடங்களுக்கோ, பிரமா ண்டமான ஆலயக் கட்டிடங்களுக்கோ உரியதல்ல. அவை அங்கே கூடி வரும் தேவ பிள்ளைகளுக்குரியவைகளே. இவ்வாறாகவே ஒவ்வொரு விசுவாசியும், திவ்விய சுபாவங்களோடு சென்றுகூடும் போது, அதை 'ஒரு கூட்டம் அல்லது சபை' (யுளளநஅடிடல) என்று அழைக்கலாம். தேவ ஆவி யானவர்தாமே அணையாத தீபமாக நமக்குள் வாசம் செய்கின்றார். எனவே, உங்களுக்கெதிராக தீமை நடந்தாலும், மற்றவர்கள் மத்தியிலே கலகங்களை ஏற்படுத்தும்படி கிரியைகளை நடப்பிக்க கூடாது. அப்படி நீங்கள் நடத்தும் போது, தேவ ஆலயமாக இருக்க வேண்டிய நீங்கள், தேவனுடைய ராஜ்யத்திற்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்து விடுகி ன்றீர்கள். உங்களை நோக்கி வரும் தீமைகளை எப்படி ஆசீர்வாதங்க ளாக மாற்ற வேண்டும் என்பதை நம்முடைய ஆண்டவராகிய இயேசு செய்து காட்டியிருக்கின்றார். எனவே, எப்போதும் நீங்கள் தாமே தேவன் மகிமைப்படும் ஆலயமாயிருங்கள்.
ஜெபம்:
உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக எங்களை அழைத்த தேவனே, நான் என் பெலவீனமான நேரத்திலும், உம்முடைய ராஜ்யத்திற்கெதிராக செயற்படாதிருக்க எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:1-25