தியானம் (மாசி 22, 2023)
தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி
1 பேதுரு 2:10
இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்
இந்த உலகத்திலே வாழும்வரை நாம் பல விருந்துபசாரங்களையும், கொண்டாட்டங்களையும், ஒன்றுகூடல்களையும் நடத்தி வருகின்றோம். அதே வேளையிலே பல கொண்டாடங்களிலே பங்குபற்றும்படி மற்றவ ர்களுடைய அழைப்பிதழை பெற்றுக் கொள்கின்றோம். அந்த கொண் டாட்டங்களிலே சில மதச்சடங்குகள் சார்ந்ததாகவும் அல்லது களியா ட்டங்கள் நிறைந்ததாகவும் இருக் லாம். வேறு சில, முதல் பாகம் மதச் சடங்குகளையும், இரண்டாம் பாகம் களியாட்டங்களை கொண்டதாகவும் இருக்கலாம். இன்னும் சில வேளை களிலே, சில கொண்டாட்டங்கள் வாக்குவாதங்களோடும், கைகலப்புக்க ளோடும் முடிவடைவதுமுண்டு. இவைகளைக் குறித்து தேவ பிள்ளைக ளும் பலவிதமாக விவாதித்துக் கொள்கின்றார்கள். யோபு என்ற பக் தனை குறித்து நாம் யாவரும் அறிந்திருக்கின்றோம். அவன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனு மாயிருந்தான். அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந் தார்கள். அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜ னம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள் முறை முடிகிற போது, யோபு: 'ஒருவேளை என் குமாரர் பாவஞ் செய்து,' தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷpத்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழு ந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துவான்;. ஏனெனில் அவன் தேவனுக்கு பயந்து நடக் கின்ற உத்தமனாக இருந்தான். பிரியமானவர்களே, இங்கே போனால் என்ன? இப்படி செய்வதில் என்ன தவறு? என்ற விவாதங்களை விட்டு விட்டு, நம்முடைய சிந்தனை, சொல், செயல் யாவும், தேவனுக்கு ஏற்பு டையதாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பார்ப்பதையும், கேட்ப தையும், செய்வதையும், ருசிபார்ப்பதையும், பேசுவதையும் குறித்து எச்ச ரிக்கை யாயிருங்கள். அவரவர் தங்கள் தங்கள் உள்ளங்களையும், இல் லங்களையும் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எனவே, தேவனு டைய ஜனங்கள் என்ற பெயரை தரித்திருக்கும் நீங்கள், இடறி விழா தபடிக்கும், பெலவீனமுள்ள தேவ பிள்ளைகளை இடறுதல் படுத்தாத படிக்கும், தேவனை அறியாதவர்கள் மத்தியிலே உங்களால் தேவ நாமம் தூஷp க்கப்படாதபடிக்கும் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலம் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புத்தியுள்ள கன்னி கைளை போல எப் போதும் ஆயத்தமுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு என்னை அழைத்த தேவனே, என்னுடைய எண்ணங்களை நிறைவேற்றாமலும் உம்முடைய சித்தத்திற்கே நான் இடங்கொடுத்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:19-25