புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2023)

போதகசிட்சை

எபிரெயர் 12:7

நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்


பாடசாலை ஒன்றிலே ஆரம்ப வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணனொருவன், தன் பெற்றோருக்கு செல்லப் பிள்ளையாக இருந்து வந்தான். அவன் மனம் நொந்து போகக்கூடாது என்று அவன் ஆசைப்ப ட்ட யாவையும் பெற்றோர் அவனுக்கு கொடுத்து வந்தார்கள். பாடசா லையிலே, ஆசிரியர் கணித பாட த்தை சில கிழமைகளாக கற்பித்த பின்னர், வகுப்பிலுள்ள மாணவர் களிடம் கேள்விகளை கேட்டார். சிலர் சரியாவும், வேறு சிலர் பிழை யாகவும் பதிலளித்தார்கள். தவ றான பதில்களை அளித்த மாண வர்களின் பிழையை சுட்டிக் காட்டி அவர்களுக்கு சரியான பதில்களை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். குறிப்பிட்ட அந்த மாணவனிடம், ஒரு கேள்வியை கேட்ட போது அவன் தவறாகப் பதிலளித்தான். ஆசிரியரும் வழமை போல, அவனுடைய தவறான பதிலை திருத்த முயன்றபோதோ, அந்த மாணவனானவன்; குழப்படைந்தவனாய் அழ ஆரம்பித்துவிட்டான். அந்த மாணவனானவ னைப் பொறுத்த வரையில் தான் நினைத்ததே காரியங்களே நடக்க வேண் டும் என்ற மனநிலையோடு வளர்ந்து வந்தான். மறுநாள் அவனுடைய பெற்றோர் ஆசிரியரை சந்தித்து பேசினார்கள். அவர்கள் ஆசிரியரை நோக்கி: எங்களது பிள்ளையை ஏன் அவமானப்படுத்துகின்றீர்கள். அவனை நியாயந்தீர்ப்பது நல்லதல்ல என்று தங்கள் பிள்ளையின் நிலை மையை நியாயப்படுத்த பல முயற்சிகளை செய்தார்கள். பிரியமான வர்களே, ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று ஒருவனிடம் கேட்கும் போது, அவன் மூன்று என்று பதிலளித்தான்;. அது தவறான பதில் என்று கூறி அவனை திருத்துவது, நியாயத்தீர்ப்பு அல்ல. அதுபோலவே, நம்மு டைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாம் தவறும் போது, நியமிக்க ப்பட்டவர்கள் போதகசிட்சை செய்வது நியாயத்தீர்ப்பு அல்ல. நியாயத் தீர்ப்பு நாளிலே இரண்டில் ஒரு காரியம் நடைபெறும். பிதாவாகிய தேவ னுடைய சித்தத்தை நிறைவேற்றியவர்கள் நித்தியஜீவனையும், ஏனை யோர் நித்திய ஆக்கினையையும் அடைவார்கள். அந்த நாளிலே நித் திய நிந்தையை அடைவதைவிட, இந்த நாளிலே நாம் போதகசிட் சையை கேட்டு, அதன்படி நம் வாழ்க்கையை சீர்திருத்திக் கொள்வதே நலமா னது. நீதிமான் தயவாய்க்குட்டி, கடிந்துகொள்வது தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்;. கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ தன் இருத யத்தை கடினப்படுத்துகின்றான்.

ஜெபம்:

கற்றுத் தந்து நடத்தும் தேவனே, உம்முடைய வார்த்தைகள் போதிக்கப்படும் போது, மனதைக் கடினப்படுத்தாமல், உம்முடைய வார்த்தையின்படி என் வழியை காத்துக்கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 12:1