புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2023)

என்னைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்து...

மத்தேயு 7:11

பரலோகத்திலிருக்கிற உங் கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?


ஐயா போதகர் அவர்களே, அந்த மனிதனாலே என் குடும்பத்தில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அப்படிப்பட்ட இழப்புக்களை நீங்கள் கூட சந்திக்கவில்லை. அவனோடு நான் சமாதானமாயிருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன் ஆனால் இது சாத்தியமற்ற காரியம். தேவன் என் உள்ளத்தை அறிவார். என்று ஒரு விசுவாசியாவன் தன் மனநிலையை குறித்து தன் போதகரிடம் விவரித்து கூறிக்கொண்டான். பொறுமையான அவனுடைய ஆதங்கத் தை கேட்டுக் கொண்டிருந்த போதகரானவர், அந்த விசுவாசியானவனை நோக்கி: சகோதரனே, உனக்கு உண்டான இழப் புக்களையும், நீ பல காரியங்களை சகித்துக் கொண்டிருப்பபதையும் நான் அறிவேன். கடந்த பல ஆண்டுகளாக நீ சபையிலே பகிர்ந்து கொண்ட அற் புதமான சாட்சிகளை நீ சிந்தித்துப் பார். உன் மகனானவனுக்கு குறிப் பிட்ட ஸ்தாபனத்திலே, பெரிதான உத்தியோகத்தை பெற்றுக் கொள்ளும்படி நீ உபவாசித்து ஜெபித்து அதைப் பெற்றுக் கொண்டாய். உன்னுடைய மகளுக்கு, தேவனுக்கு பயந்த நல்லதொரு கணவன் கிடைக்க வேண் டும் என்று சில ஆண்டுகளாக விசுவாசத்தோடு காத்திருந்தாய், அதை தேவனானவர் அதிசயிக்கத்தக்க விதமாக நடத்தி முடித்தார். இப்படியாக, கல்வி, தொழில், சுகம், வீடு, பாதுகாப்பு என்று பல காரியங்களுக்காக ஊக்கமாக பல நாட்களாக ஜெபித்து ஜெயம் கொண்டாய். இவை யாவற்றையும் விட மேலானதும், அவசியமானதுமாக உள்ளான மனிதன் பெலனடைய வேண்டும். மன்னிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏன் உனக்கு ஜெபிக்க முடியாமல் இருக்கின்றது? என்று அந்த விசுவாசியானவனை உற்சாகப்படுத்தினார். பிரியமாவர்களே, உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங் கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண் டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, உங்களால் குணப்படுத்த முடியாத உங்கள் மனப்புண்களை குணமாக்க வல்வராகயிருக்கின்ற தேவனை நோக்கிப் பாருங்கள்.

ஜெபம்:

நன்மையான ஈவுகளை கொடுக்கும் பரம தந்தையே, நான் உலக தேவைகளுக்காக மட்டும் உம்மை பற்றிக் கொள்ளாமல், என் மனம் மறுரூபமாகும்படிக்கு உம்மை சார்ந்து வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13