புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2023)

கிறிஸ்துவின் சரீரத்தின் நிறைவு

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்க டவதுஇ இதற்கென்றே நீங் கள் ஒரே சரீரமாக அழை க்கப்பட்டீர்கள்;


கடந்த சில நாட்களாக நாம் சமாதானமாயிருப்பதைக் குறித்து தியா னித்து வருகின்றோம். நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகு படிக்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை, நாம் நம்மு டைய வழிகளை நியாயப்படுத்தவோ, நம்முடைய இச்சைகளை நிறை வேற்றுவதற்காகவோ பயன்படுத்தினால், நாம் தேவ சாயலிலே குன்றிப் போகின்றவர்களாகவும், வேதப்புரட்டராகவும் மாறிவிடுவோம். எனவே நாம் 'கூடுமானவரை எல்லா மனிதரோடும் சமாதானமாயிருங்கள்' என்ற வேத வார்த்தையை உண்மையுள்ள மன தோடு நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உலகத்திலே எல்லா மனிதரோ டும் நாம் சமாதானமாக இருக்க முடி யுமா? இல்லை, வேதம் கூறும் சத்தி யத்தை பகைக்கின்றவர்கள், நம்மை எப்போதும் பகைஞராகவே கருது வார்கள். தேவ நீதியை நிறைவேற்றுவதால், உடன் சகோதரரோ, மற்றய மனிதர் களோ நம்மை பகைத்தால் நாம் என்ன செய்ய முடியும். உலகம் முழு வதும் நம்மைப் பகைத்தாலும், நாம் எவரைக் குறித்த கசப்பையும் நம் உள்ளத்தில் வேர் கொள்ள விடக்கூடாது. ஆனால், தேவனுடைய பார்வையிலே நாம் குற்றவாளிகளாக இருந்தால், நம்முடைய கசப்பான வைராக்கியங்களை நிறைவேற்றும்படி 'என்னால் கூடுமானவரை நான் எல்லா மனிதரோடும் சமாதானமாயிருக்க முடியும்' என்று தேவனுடைய பிள்ளைகள் கூற முடியாது. கடந்த நாட்களிலே நடந்த கசப்பான அனு பவங்களை குறித்தே அதிமாக சிந்தனை செய்கின்றீர்களா? உங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்துத்தி, உடன் சகோதர சகோதரிகளிடம் ஆதரவை பெற்றுக் கொள்ள, மற்றயவர்களுடைய குறைகளை பேசிக் கொண்டிருக்கின்றீர்களா? உங்களை பகைத்திருக்கின்றவர்களை ஆசீர் வதித்து அவர்களுக்காக ஜெபிக்க முடியாமல் இருக்கின்றதா? நான் மன்னிப்பேன் மறக்கமாடடேன் என்ற எண்ணம் அவ்வப்போது உங்கள் மனதில் எழுகின்றதா? இவைகளெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்தின் நிறை விற்குரிய எண்ணங்கள் அல்லவே. (லூக்கா 6:27-29, எபிரெயர் 12:15, யாக்கோபு 3:14, 1 கொரி 12:26-27) இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனாகிய கர்த்தர் மனிதர்களுடைய எண்ணங்களை நன்றாக அறிந்தி ருக்கின்றார். எனவே உங்கள் இருதயங்களை ஆளுகை செய்வது என்ன என்பதை அவரவர் ஆராய்ந்து அறிந்து கொள்வது, அவரவருக்கு நன்மையை உண்டு பண்ணும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நீர் எனக்கு கொடுத்த சுயாதீனத்தை, என் துர்குணத்தை நிறைவேற்றி, என்னை நியாயப்படுத்து வதற்கு பயன்படுத்தாமல் உமக்கு கீழ்படிந்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:16