தியானம் (மாசி 17, 2023)
சமாதானத்தின் நற்செய்தி
1 யோவான் 3:13
என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
பழைய ஏற்பாட்டு காலத்திலே, பாவ நிவர்த்திற்காக பழுதற்ற இளங்கடாவைப் பலியாக ஒப்புக்கொடுத்து வந்தார்கள். இந்தப் பலிகளை ஆசாரியன் அநேகந்தரம் செலுத்திவந்தான். (லேவி 4:23-25, எபிரெயர் 10:1-22). இது வரவிருக்கும் சம்பூரணமான ஜீவபலிக்கு நிழலாக இருந்தது. எனவே, பலிகொடுக்கப்படும் ஆடு பழுதற்றதாக காணப்பட வேண் டும். காலம் நிறைவேறிய போது, முன்குறிப்பிடப்பட்ட நம்முடைய பிரதான ஆசாரியராகிய இயேசுவோ, மனிதகுலத்தின் பாவங்களுக்காக சம்பூரணமான ஒரே பலியாக தன்னை ஒப்புக் கொடுத்தார். சிந்தப்பட்ட அவருடைய தூயஇரத்தம் சகல பாவங்க ளையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். தம்மை பலியாக ஒப்புக்கொடுத்த மீட்பர் இயேசுவில் பாவம் இருக்கின்றது என்று யாரும் சொல்லக் கூடுமோ? முடியாது! என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும் என்று ஆண்டவர் இயேசு கூறினார். (யோவான் 8:46, எபிரெயர் 4:15, ஏசாயா 53:34-7). ஆனால், அன்றைய நாளிலிருந்த யூதமார்க்கத்தின் பிராதான ஆசாரியரும், பரிசேயர், சதுசேயர் வேதபாரகரில் அநேகமானோரும், ஜனங்களில் பெரும்பான்மையானோரும் ஆண்டவர் இயேசுவுக்கு எதிர்த்து நின்றார்கள். ஏனெனில், ஆண்டவர் இயேசு அவர்களுடைய பாவங்களை சுட்டிக்காட்டி, பரிசுத் தமாகும் வழியை போதித்ததால், அவரை தங்கள் எதிரியாக அவர்கள் கருதினார்கள்;. இப்படியாக பெரும்பான்மையானோர் அவருக்கு சத்துருக்களானதால், அவர் யாவரோடும் சமாதானமாக இருக்கவில்லை. எனவே, அவர் சமாதானத்தைபற்றி போதிக்க தகுதியற்றவர் என்று கூறலாமா? இல்லை, அவரொருவர் மாத்திரமே சமாதானக் காரணராக இருக்கின்றார். பெரும்பான்மையானோர் அவரை எதிர்த்து அவரை கொன்றுபோட சதி செய்தபோதும், அவர் அவர்களுடைய பாவங்களையும் தன்மேல் சுமந்து கொண்டார். தன்னை துன்பப்படுத்துகின்றவர்களை மன்னிக்கும்படி பிதாவாகிய தேவனை வேண்டிக்கொண்டார். இன்றைய நாளிலே நீங்கள் சத்திய வார்த்தையை தூய்மையாக பேசுவதால், ஜனங்கள் உங் களை எதிரிகளும், குழப்பவாதிகளும் என்று கூறினாலும் நீங்கள் சோர்ந்து போய் விடாதிருங்கள். இந்த உலகமும், அதன் போக்கினால் வஞ் சிக்ப்படுகின்றவர்களும் உங்களை பகைப்பார்கள்;. எனினும் சத்திய வார்த்தைகளை போதிக்கும் நீங்களோ, அவர்களுடைய அழியல்ல, மாறாக அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாகவே இருக்க வேண்டும்.
ஜெபம்:
சமாதானத்தின் தேவனே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம் பலவித தீமையான மொழிகளையும் எங்கள் பேரில் பொய்யாய்ச் சொன்னாலும் நாம் சோர்ந்து போகாமல் முன்செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 9:6