புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2023)

நீதியின் வழியில் உண்டாகும் சமாதானம்

ரோமர் 12:18

கூடுமானால் உங்களா லானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.


ஒரு குறிப்பிட்ட தேசத்திலே நிலவி வந்த அசாதாரணமான காலநிலை காரணமாக, விவசாயத்துறை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஊர் ஊராக சென்று, உலர் உணவுப் பொதி களை வழங்கும்படி அரசாங்கத்தினால் பல பணியாளர்கள் நியமிக் கப்பட்டிருந்தார்கள். அரச ஒழுங்கின் படி, ஒரு குறிப்பிட்ட ஊருக்கு உணவுப் பொதி களை வழங்குமாறு பணியாளரொருவர் சென்றிருந்தார். அந்த ஊரிலே வாழ்ந்து வந்த, சில செல்வாக்கு மிக்க மனிதர் கள், அந்தப் பணியாளரை நோக்கி: எங் களை இந்த ஊரில் உள்ள எளிமை யான பொதுமக்களோடு வரிசையிலே நிற்க்குபடி செய்யாமல், முதலாவதாக, பொதிகளை எங்களுக்கு கொடு க்கும்பட்சத்தில், நாங்கள் உனக்கு ஆதராவாக இருப்போம் என்று கேட் டுக் கொண்டார்கள். அதற்கு அந்தப் பணியாளர் அவர்களை நோக்கி: நான் அரசாங்க திணைக்களத்தின் பணிப்புரையோடு வந்திருக்கின்றேன். அரசாங்கத்தினால் ஏற்படுத் தப்பட்ட ஒழுங்கின்படி, உணவற்று தவிக் கும், குழந்தைகள், முதியவர்கள், வியாதிப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு முதலிடம் கொடுக்கப்படும். எனவே அந்த பணிப்புரைக்கு இணங்க நீங்கள் யாவரும் வரிசையில் காத்திருக்கும்படி தயவாக கூறினார். அதை கேட்ட செல்வாக்குள்ள மனிதர்கள், அந்த பணி யாளரோடு கோபம் கொண்டார்கள். அவனிடத்திலே குற்றும் பிடிக்கும்படி வகை தேடினார்கள். ஆனால், அந்தப் பணியாளரோ, எவரோடும் கோபம் கொள்ளாமல், பாரபட்சமின்றி, தனக்கு கொடுத்த ஒழுங்கின்படி உணவுப் பொதிகளை வழங்கினார். பிரியமானவர்களே, இந்த சம்பவத்திலே, செல் வாக்குள்ள அந்த மனிதர்கள், குறிபப்பிட்ட பணிப்பாளரோடு சமாதான மாக இருக்க இடங் கொடுக்கவில்லை. அந்தப் பணிப்பாளரோ, தன்னு டைய பணியை நீதி நியாயத்தோடு நடப்பித்தார். யாராவது, அந்தப் பணிப்யாளரைப் பார்த்து, அவர் சில மனிதர்களோடு சமாதானமாக இல்லை அதனால் அவர் நீதிமானல்ல என்று கூற முடியுமோ? இல்லை! நாம் அநீதியினால் உண்டாகும் சமாதானத்தையல்ல வேதம் கூறும் நீதி யினால் உண்டாகும் சமாதானத்தையே நாட வேண்டும். நாம் அநீதி க்கும், சீர்கேட்டிற்கும் நம்மை ஒப்புக் கொடுக்க முடியாது. அதனால் தான் கூடுமான வரையிலே எல்லா மனிதரோடும் சமாதானமாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும் என்று வேதம் நமக்கு அறிவுரை கூறுகின் றது. எனவே, சமாதானம் தேவை என்று தேவ நீதியை புறக்கணியா மலிருங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக் கொள்ளாமலிருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-8

Category Tags: