புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2023)

நாம் இந்த உலகத்தாரல்லவே!

ரோமர் 12:7

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்;


ஒரு ஊரிலே வாழ்ந்த இரண்டு மனிதர்களுக்கிடையேயான நட்பு மிகவும் உறுதியாய் இருந்தது. சில ஆண்டுகளாகவே அவர்கள் நல்ல புரிந்துண ர்வோடு உற்ற நண்பர்களாக இருந்து வந்தார்கள். அவர்களுடைய குடு ம்பத்தாரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தார்கள். இப்படியாக நாட் கள் செல்கின்ற வேளையிலே, அவர்களில் ஒருவன், மற்றவனைக் குறி த்த ஒரு காரியத்தை வேறொரு குடு ம்பத்தாருக்கு கூறிவிட்டான் என்ற செய்தி மற்றவனுடைய காதிலே எட் டியது. காரியத்தையும் அதன் தார்ப ரியத்தையும் அறிய முன்னதாகவே, இவனெல்லாம் நண்பனா? இவனு டைய பூர்வீகத்தை நான் சொல்லுகின்றேன்! எதிரிகளை நம்பலாம் ஆனால் துரோகிகளை நம்பக் கூடாது என்று அவனுடைய தவறுகளை பற்றி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டான். பிரியமானவர்களே, இந்த உலக த்திலே பல தத்துவங்களை உலக ஞானிகள் எழுதி வைத்திருக்கின்றா ர்கள். அவைகளில் பல நம்முடைய உணர்ச்சிகளை தூண்டி விடுவதா கவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளிலே புத்தியைத் தெளிவிக்கின்றதற்கு இச் சிக்கப்பட தக்கதாயும் இருக்கின்றது. நாம் ஆண்டவராகிய இயேசுவை அறிய முன்னதாக பரலோகத்தோடு கொண்டுள்ள உறவிலே எப்படிப் பட்டவர்களாக இருந்தோம்? சத்துருக்களாகவா? பகைஞராகவா? துரோ கியாகவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் தேவனுக்கு சத்துருக்க ளாகவும், உலகத்தை சிநேகித்த பகைஞராகவும், படைத்த தேவனுக்கு துரோகிகளாகவும் இருந்தோம் (ரோமர் 5:10, யாக்கோபு 4:4, எபே 2:1-3). தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயி ருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனு டைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஆதலால், இரட்சிக்கப்பட்ட நாம், இரட்சிக்கப்பட்டவர் களுக்கோ, அல்லது இரட்சிக்கப்படாதவர்களுக்கோ, தீமைக்கு தீமை செய்யக் கூடாது. நாம் எந்த அளவினாலே அளக்கின்றோமோ, அந்த அளவினாலே நமக்கும் அளக்கப்படும். நாம் உலக ஞானிகளின் தத்து வங்களை பேசுவோமாக இருந்தால், நம்முடைய குறைவில் உலக ஞானத்தினால் நன்மை உண்டாகுமோ? பிரியமானவர்களே, நாம் நம் முடைய ஆண்டவராகிய இயேசுவைப் போல தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

மனிதனால் கூடாதது உம்மால் கூடும் என்று சொன்ன தேவனே, நான் தீமைக்கு தீமை செய்யாமல், எப்போதும் நன்மையே செய்கின்ற வனாக இருக்க, தூய ஆவியினாலே எனக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-2