புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2023)

சன்மார்க்கரின் அடிமைத்தனங்கள்

லூக்கா 18:14

ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.


நாங்கள் துன்மார்க்கமான வழியில் வாழ்வதில்லை. யாருக்கும் தீமை செய்வதில்லை. நன்றாக உழைத்து தாராளமாக சேமித்து வைத்துள்ளோம். குடும்பமாக உல்லாசப் பயணங்களுக்குச் செல்கின்றோம். அவ்வப்போது ஏழைகளுக்கு உதவி செய்கின்றோம். நிறைவான வாழ்க்கை வாழ்க்கின்றோம். மீட்க்கப்படும்படிக்கு நாம் ஒன்றுக்கும் அடிமையானவர்களாய் இல்லை. நாங்கள் உங்களுடைய முன்னைய வாழ்க்கையைப் போல கண்போன வழியிலே வாழவில்லை. எனவே நீங்கள் கூறும் இந்த மீட்பா னது எங்களுக்கு அவசியமில்லை என்று சன்மார்க்கமான வழியிலே வாழும் மனி தனானவன் ஒரு சுவிசேஷ ஊழியரி டம் கூறினான். இப்படியாகவே, ஆண் டவராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே இருந்து சிறப்பு குடிமக்களாக திகழ்ந்த பரிசேயனும், சமுதாயத்தினால் துரோகி என்று கருதப்பட்ட ஆயக்காரனும் ஜெபிக்கும் படியாக ஆலயத்திற்குச் சென்றார்கள். பரிசேயனானவனோ நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கி றேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆனால் பாவியாகிய ஆயக் காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். பரலோகத்திலிருக்கின்ற தேவன், பாவியாகிய அந்த ஆயக்காரனுடைய ஜெபத்தை கேட்டார். அவன் நீதிமானாக வீடு திருப்பினான். பரிசேயனோ, பெருமையிலும், அகங்காரத் திலும், மேட்டிமையிலும், சுயநீதியாகிய பாவகட்டுக்களில் மூழ்கியிருந் ததால் ஆகிய பாவக் கட்டுக்களில் மூழ்கியிருந்ததால், தனக்கு மீட்பு வேண் டும் என்று அறியாமல், இருளிலே நடக்கின்றவனாக இருந்தான். இப்படி யாக இந்த உலகத்திலே வாழும் பல கல்விமான்களும், சன்மர்கர்களும், சமுக அந்தஸ்துள்ளோலும், மதப்பற்றுள்ளோரும் ஆண்டவராகிய இயே சுவின் நித்திய ராஜ்யத்தின் அன்பின் அழைப்பை உணராமல், தங்கள் மனதை கடினப்படுத்திக் கொள்கின்றார்கள். நாமோ, ஒருபோதும் நம்மு டைய மனதை கடினப்படுத்தாமலும், வேதத்தை எவ்வளவு கற்றுக் கொண் டாலும், வேத வார்த்தைகள் பேசப்படும் போது தாழ்மையுள்ளமனதோடு கீழ்படிகின்றவர்களாக காணப்பட வேண்டும்.

ஜெபம்:

புதிதும் ஜீவனுமான பரலோக பாதையை ஏற்படுத்திய தேவனே, என்னுடைய கிரியைகளினாலே நான் மேட்டிமையுள்ள இருதயமுள்ளவனாக மாறிவிடாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 3:19