புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2023)

மகிழ்ந்து களிகூருங்கள்!

லூக்கா 15:7

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்


கடந்த நாளிலே தன் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்திகளை அழித்துப் போட்ட கெட்ட குமாரனின் உவமையை நாம் குறித்து தியானித்தோம். நம் முடையவர்களில் ஒருவன், தன் சொத்தை திரட்டிக் கொண்டு, தன் குடு ம்பத்தைவிட்டு தூர இடத்திற்கு சென்று, துன்மார்க்கமாக வாழ்ந்து, விப சாரிகளிடத்திலே தன் ஆஸ்தியை அழித்து கொண்டிருந்தால், அவ னைக் குறித்த நம்முடைய மனநிலை எப்படியாக இருக்கும்? அவன் தன் குடும்பத்திற்கு அவமானத்தையும், மிகு ந்த மனவேதனைiயும் உண்டு பண் ணுகின்றவனாக இருப்பான் அல்லவா? ஆனால், அவன் உண்மையாய் மனம் வருந்தி, ஒன்றுமில்லாதவனாக வீடு திரும்பினால் யார் அவனை ஏற்றுக் கொள்வார்கள்? நீ என்ன முகத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கின்றாய் என்று உடன் சகோதரர் கூட கேட்பார்கள் அல்லவா? அவன் திருந்தி னாலும், இவன் விபசாரிகளோடு துன்மார்க்கமாய் திரிந்தவன் என்று அவனைப் பற்றி சமுதாயம் அவதூறு பேசும் அல்லவா? இவை யாவம் இந்த உலகத்தின் போக்கா இருக்கின்றது. ஆனால், இதைக்; குறித்து ஆண்டவராகிய இயேசு என்ன கூறியிருக்கின்றார் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். சிலவேளைகளிலே அநேக மனிதர்களை இந்த உலகமும், பாவ இச்சைகளும் மேற்கொண்டு விடுகின்றது. இப்படிப்பட்டவர்களை சமுதாயம் புறக்கணித்து விடுகின்றது. மறுபடியும் எங்களுக்கு அவமா னமும் நிந்தையும் கொண்டு வரும்படி வந்திருக்கின்றான் என்று உற்றார் உறவினரும் சொல்லாலாம். ஆனால், மீட்பராகிய இயேசு சொன்னார்: மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிரு க்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். ஆம், பிரியமானவர்களே, மற்றவர்களுடைய வெற்றியில் அவர்களோடு இணைந்து களிகூர ஆயத்தமா? பாவிகள் அடிமைத்தன கட்டுகளிலிரு ந்து விடுதலையாகி வீடு திரும்பும் போது அவர்களுடைய இரட்சிப்பைக் குறித்து, பரலோகம் களிகூருகின்றது. மீட்கப்பட்டவர்கள் என்னுடைய குமாரன் அல்லது குமாரத்தி என்று கூற பரமபிதா வெட்கப்படுவதில்லை. எனவே நாமும் பரலோகத்தோடு இணைந்து பாவிகளின் இரடசிப்பில் அகமகிழ்ந்து களிகூர வேண்டும்.

ஜெபம்:

பாவியாயிருந்த என்னை மீட்டெடுத்து உம்முடைய பிள்ளையாக்கிய தேவனே, நானும் மற்றவர்களுடைய மனந்திரும்புதலில், அகம கிழ்ந்து களிகூரும்படிக்கு உமக்கு ஏற்ற இருதயத்தை தந்தருள்வீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9