தியானம் (மாசி 12, 2023)
அழியாத பங்கு
சங்கீதம் 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்
கெட்ட குமாரனுடைய உவமையை நாம் யாவரும் அறிந்திருக்கின்றோம். அதை ஊதாரிப்பிள்ளையின் உவமை என்றும் அழைக்கின்றார்கள். அந்த உவமையிலே, ஒரு மனிதனானவனுடைய இளைய குமாரன், தனக்கு சேர வேண்டிய சுதந்திரத்தின் பங்கை பிரித்தெடுத்து, தூர தேசத்திற்கு சென்று, துன்மார்க்கமாக வாழ்ந்து, எல்லாவற்றையும் அழித்து, ஒன்றுமே இல்லாதவனாய் ஒருநாள் வீடு திரும்பினான். இந்த உலகத்தின் அளவு கோலின்படி அவன் ஐசுவரியவானா னவும், திரவியசம்பன்னனாகவும் செழிப்போடு வீட்டைவிட்டுச் சென் றான். ஆனால், அவன் தன் ஆத்துமா விலே மிகவும் நிர்ப்பாக்கியமுள்ளவ னும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரி த்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை உணராதவனுமாக இருந்தான். ஆனாலும், தான் இச்சித்த உலக ஐசுவரியத்தை முற்றலி லும் இழந்தவனாய் வீடு திருப்பியபோது, இந்த உலக அளவுகோலி ன்படி தரித்திரனும், வேண்டப்படாதவனுமாக இருந்தான். ஆனால் அவன் ஆத்துமாவோ ஒளியைக் கண்டது. அவன் மனதிலிருந்த காரி ருள் நீங்கி, பிரகாசம் வந்தது. மனந்திரும்பும் தாழ்மையான இருதயம் உண்டானது. வாழ்வின் மேன்மை இன்னதென்றும், தான் இருக்க வேண் டிய இடம் எது என்பதையும் உறுதியாய் அறிந்து கொண்ட நிறைவுள்ள இருதயத்தோடு அவன் தன் வீடு திருப்பினான். அழிவுள்ளதை இழந்து அழியாததைப் பற்றிக் கொண்டான். தன் தந்தை வீட்டில் இரக்கம் இருக்கின்றது என்பதை நிச்சயமாக உணர்ந்து கொண்டான். பிரியமா னவர்களே, உங்களுடைய பங்கு எங்கே இருக்கின்றது? இந்த உலகிலே எதை நீங்கள் ஆசீர்வாதமாக எண்ணுகின்றீர்கள்? நாம் இந்த உலகத்தின் அளவுகோலின்படி எவருடனும் பங்கற்றவர்களாகவும், தரித்திரர்களாக வும் கருதப்பட்டாலும், நம்முடைய பங்கு கர்த்திரிடத்தில் இருப்பதே மேலானது. அது அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தர த்திற்கேதுவான பங்காயிருக்கின்றது. தாவீது என்பவர் ராஜாவாக இரு ந்தார். எனினும், அவர் தன்னிடத்திலுள்ள உலக செல்வத்தையும், பதவி யையும் பொருட்டாக எண்ணாமல், நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது. ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. கர்த்தரே என் பங்கும் சுதந்திரமுமாயிருக்கின்றார் என்றார். நாமும் இந்த உலக த்தோடு அழிந்து போகின்றவைகளை நம்முடைய பங்காக வைத்தி ருக் காமல், கர்த்தரையே எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும்.
ஜெபம்:
என் பங்கும் ஆசீர்வாதமுமான தேவனே, அழிந்து போகின்ற இந்த உலக செல்வங்களில் களிகூராமல், உம்முடைய வலதுபாரிசத்திலுள்ள நித்திய பேரின்பதை நாடித் தேட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 3:26