புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2023)

கிறிஸ்துவின் சாயலிலே வளருங்கள்...

ரோமர் 12:15

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.


ஒரு ஊரிலே இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் இளையவன் தன் இளைமை காலத்திலே விட்ட தவறுகளால், அவன் தன் வாழ்க்கையிலே சில பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டது. பல கஷ;டங்கள் மத்தியிலே தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் அவனுக்கு, அவனுடைய மூத்த சகோதரனானவன் பல உதவிகளை செய்து வந்தான். இளைய சகோதரனுடைய மகனானவன் பல சிரமங் களின் மத்;தியிலே ஊக்கமாக படித்து வந்தான். உயர்தரப் பரீட் சையிலே அதிவிஷேட சித்தியை பெற்றதினால், புலமை பரிசில் பெற்று (ளுஉhழடயசளாip), நாட்டிலுள்ள பிரபல்யமான பல் கலைக்கழக த்திலே வைத்தியத் துறையில் படிக்கும்படி அனுமதியை பெற்றுக் கொண்டான். பேரானந் தமடைந்த அவனுடைய தந்தையார், இந்த நல்ல செய்தியை தன் மூத்த சகோதரனுக்கு, கூறவேண்டும் என்று துரிதமாக தன் அண்ணன் வீட்டிற்கு சென்று, நன்றியுள்ள உள்ளத்தோடு, தன் மகனானவன் பரீட்சையில் பெற்ற வெற்றியை கூறினான். ஆனால், அதை கேட்ட மூத்த சகோதரனுடைய முகநாடியோ வேறுபட்டது. தன் இளைய சகோதரனுடைய மகனுடைய வெற்றியை கொண்டாட வேண் டிய நேரத்திலே, அவன் அதை பெரிதுபடுத்தாமல், சென்றுவிட்டான். பிரி யமானவர்களே, சில வேளைகளிலே சில மனிதர்கள் மற்றவர்களுடைய துன்பத்திலும், விழுகையிலும் அவர்களோடு இணைந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவார்கள். ஆனால், அவர்களுடைய இன்ப த்திலும், எழுச்சியிலும், மகிழ்ந்து கொண்டாட அவர்களுக்கு மனதி ல்லை. அதாவது, மற்றவர்கள் எப்போதும் தங்கள் ஆட்சிக்கு கீழே இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையவர்களாக வாழ்கின்றார்கள். கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து வரும் நம்முடைய மனநிலை அப்படி யாக இருக்க முடியாது. நாம் அழு கிறவர்களுடனே, அவர்களுடைய துக்கத்திலே உறுதுணையாக நாம் நிற்க வேண்டும். சந்தோஷப்படுகிற வர்களுடனே சந்தோஷப்பட வேண்டும். அவர்களுடைய வெற்றியிலே நாம் அவர்களோடு சேர்ந்து களிகூரவேண்டும். எரிச்சலின் ஆவி நம்மை மேற்கொள்ளுவதற்கு விடக்கூடாது. ஒரு வேளை நம்முடைய மாம்ச மான பழைய மனுஷனுக்குரிய எரிச்சலின் சுபாவமானது தலை தூக்கும் போது, நாம் யாரைக் குறித்து எச்சரிசலடைகின்றோமோ, அவர்களை இன்னும் அதிகமாக தேவன் ஆசீ ர்வதிக்க வேண்டும் என்று நம்முடைய மாம்ச எண்ணத்திற்கு விரோ தமாக ஜெபம் செய்ய வேண்டும்.

ஜெபம்:

இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடிருக்கின்ற தேவனேஇ நான் மற்றவர்களுடைய உயர்விலும் தாழ்விலும் அவர்களோடு மனதார பங்கேற்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:2