புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2023)

வழக்கத்தின்படியே...

யோவான் 17:21

நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்


இவர்களுக்கு வேறு அலுவல் இல்லை. எப்போ பார்த்தாலும் ஆலயத்திற்கு செல்வதும், ஜெபிப்பதும், அதைப் பற்றி பேசுவதுமாகவே இருக்கின்றார்கள். வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள். நாங்கள் வாழவி ல்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? ஏதோ ஒரு புதுமையான மார்க்கத்தை கண்டு பிடித்து விட்டது போல இருக்கின்றார்கள்' என்று ஒரு விசுவாசக் குடும்பத்தை பார்த்து அவர்களுடைய உறவினர் நகைத்து, அவர்களை நிந்தித்தார்கள். மனித குலத்தின் மேல் விழுந்த சாபத்தை தம்மேல் ஏற்று பரிகரிக்க வந்த மீட்பராகிய இயேசு, தம்முடைய பூவுல திருப்பணியின் ஆரம்ப நாட்களிலே, யோர்தான் ஆற்றங்கரையிலே, யோவான் ஸநானனிடத்தில், ஞானஸ்நானம் பெற்று பின்பு, தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய் வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவே சித்து, வாசிக்க எழுந்து நின்றார். இந்த சம்பவத்திலே குறிப்பிடப்பட்ட வார்த்தைகiளில் 'வழக்கத்தின்படியே' என்ற சொல்லை இன்று தியானம் செய்யுங்கள். நாம் தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்ட நாட்க ளுக்கு முன், பாவ சாபத்திலே வாழ்ந்து, உலகத்தோடு ஒத்தோடும் போது யாரும் எதையும் நமக்கு கூறுவதுமில்லை, நாம் கெட்டு அழிந்தாலும் நம்மைப் பற்றி எந்தக் கவனமும் யாரும் எடுப்பதுமில்லை. ஆனால் நாம் தேவனுக்கென்று வாழ ஆரம்பிக்கும் போது, தேவனாலே நம்முடைய வாழ் க்கை முறைமையும் மாற்றமடையும் போது, நாம் அனுதினமும் வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும், தவறாமல் ஆராதனையில் கலந்து கொள்வதையும் கண்டு, பலர் நம்மை நகைத்து, ஏளனமாக, பார்க்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கு ஜெப ஆலயத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. தேவனுடைய வார்த்தையை பேசுவ தும், ஜெபிப்பதும், பிதாவினுடைய சித்தத்தை நிறைவேற்றுவதும் அவ ருடைய போஜனமாகவே இரு ந்தது. ஆண்டவராகிய இயேசு பிதாவி லும், பிதா ஆண்டவராகிய இயேசு விலும் இருப்பதினாலே, இந்தப் பூமியிலே ஆண்டவராகிய இயேசு வாழும் போது, பிதாவோடுள்ள ஐக்கியத்தை கொண்டாடுவதிலும், உறவு கொள்வதிலும் தவறாமல் இரு ந்தார். நாமும் மற்றவர்களுடைய நகைப்பை பொருட்படுத்தாமல், தேவ உறவிலே வளர்வதை வழக்கமாக்கிக் கொள்வோமாக.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே, நான் அனுதினமும் உம்மோடு உறவாடவும், ஒருமைப்பாட்டில் வளர்ந்து பெருகவும், உணர் வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:3