புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 09, 2023)

மகா பிரதான அழைப்பு

யோவான் 17:3

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்


ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொ ருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவ னுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொரு வனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க் கதரிசனம் உரைத்தலும், வேறொருவ னுக்கு ஆவிகளைப் பகுத்தறித லும், வேறொருவனுக்குப் பற்பல பாiஷ களைப் பேசுதலும், வேறொரு வனுக் குப் பாiஷகளை வியாக்கியா னம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. சரீ ரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்க ளெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது. அந்தப் பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நீங்களே கிறிஸ்துவின் ஒரே சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயு மிருக்கிறீர்கள். வரங்களில் வித்தியாசங்கள் உண்டு. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் அழைத்த தேவன் ஒருவராகவே இருக்கின்றார் (1 கொரி 12). ஒருவேளை நாம் அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசிகளாகவோ, சுவி சேஷகராகவோ, மேய்ப்பராகவோ, போதகராகவோ, மூப்பர்களாகவோ, உதவி ஊழியங்களை செய்கின்றவர்களாகவோ அல்லது விசுவாசிகளா கவோ இருக்கலாம். நாம் யாவரும் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட் டிருக்கின்றோம். நாம் யாவரும் நித்திய ஜீவனை அடைவதற்காக அழை க்கப்பட்டிருக்கின்றோம். அதுவே நம்முடைய பிரதானமான அழைப்பாக இருக்கின்றது. அதை நாம் பெற்றுக் கொள்வதற்கு, நம்மைக் குறித்த தான பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நம் வாழ்வில் நாம் நிறை வேற்ற வேண்டும். அனுதினமும் வேதத்தை வாசித்து தியானிப் பதும், ஊக்கமாக ஜெபிப்பதும் இன்றியமையமையாதவைகள். நான் சுவிசேஷ கன் நான் ஜெபிக்கத் தேவையில்லை அல்லது நான் மேய்ப்பன், பல முறை வேதத்தை வாசித்திருக்கின்றேன் எனவே நான் வேதத்தை வாசி த்து தியானிக்கத் தேவையில்லை என்று ஒருவரும் கூற முடியாது. ஒன் றான மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற அறிவிலே நாம் ஒவ்வொருவரும் வளர வேண் டும். அதாவது, வேதத்தை வாசித்து புத்தக அறிவிலே வளர் வN தாடு நிறுத்திவிடாமல், மிகமுக்கியமான அவரோடு உள்ள உறவில் தினமும் வளரவேண்டும். அந்த மெய்யான உறவானது நம்முடைய வாழ்க்கை யில் நாம் செய்யும் கிரியைகள் வழியாக வெளிக்காட்ட படவேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, வேறெந்த காரியத்திற்காகவும் நான் நித்திய ஜீவனை இழந்துவிடாமல், உம்மோடுள்ள ஐக்கியத்திலே அனுதினமும் வளர்ந்து பெருக கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 3:16