புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2023)

எதிரி யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ் ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதி ர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.


இளைப்பாறுதல் தரும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகராஜ்யத்தைக் குறித்து உவமைகள் வழியாக பேசும்போது, பர லோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனு க்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத் துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான் என்று கூறினார். களைகளாகிய பொல்லாங்கனுடைய புத்தி ரரை தேவ ராஜ் யத்தின் புத்திரர் மத்தியிலே அனு ப்புபவன் சத்துருவாகிய பிசாசா னவனாக இருக்கின்றான். நாம் பிசாசானவனை குறித்து பயந்து நடுக்கின்றவர்கள் அல்லர். பிசாசா னவனே ஆண்டவர் இயேசுவின் நாமத்தை தரித்த வர்களை பார் த்து நடுகுங்கின்றான். ஆனால், நம்முடைய எதிரி யார்? அவன் ஏன் வருகின்றான்? எப்படி வருகின்றான்? எப்படியாக வஞ்சிக்கின்றான் என் பதை குறித்து அறிந்திருக்க வேண்டும். நாம் தீய வழி களை வெறுத்து, தேவ ஆலோசனையின்படி நல் வழியில் நடக்கும் போதும், சோதனைக் காரணாகிய சத்துருவானவன் நம்மை வஞ்சிக்கும்படி பல சூழ்ச்சிகளை செய்து கொண்டே இருப்பான். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர் த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்க த்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோ டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, சத்தியம் என் னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்தி ற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இர ட்சணியமென்னும் தலைச்சீரா, தேவவசனமாகிய ஆவியின் பட்டயமா கிய தேவனுடைய சர்வாயுதவர்க் கத்தையும் நாம் எடுத்துக் கொண்டு, எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத் தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுகி ன்றவர்களாக இருக்க வேண் டும். சில வேளைகளிலே சத்துருவானவனின் சோதனைகளை நாம் தவி ர்த்துக் கொள்ள முடியாத நிலை உண்டாகலாம். அந்த வேளைகளிலே, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாக அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

ஜெபம்:

ஜெயங் கொடுக்கின்ற தேவனாகிய கர்த்தாவே, சத்துருவின் சூழ்ச்சிகளை கண்டு பயந்து நடுங்காமல், அவனுடைய தந்திரங்களை நிதானித்தறிந்து, அவைகளை முற்றிலும் ஜெயம்கொள்ள பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10