புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2023)

சோதனைகளும் தெரிவுகளும்

நீதிமொழிகள் 4:12

நீ அவைகளில் நடக்கும் போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்


ஆண்டிறுதிப் பரீட்சைக்கு சென்ற மாணவனானவன், தனக்கு கொடு க்கப்பட்ட வினாத்தாளை துரிதமாக வாசித்துப் பார்த்தபோது, கொடுக்க ப்பட்ட 10 கேள்விகளில், விரும்பிய 7 கேள்விகளை செய்யும்படி வினா த்தாளின் முன்பகுதியிலே குறிப்பிடப்பட்டிந்தது. அவனோ, தனக்கு கடி னமானதும், தான் ஆயத்தப்படாததுமான பகுதிகளிலுள்ள கேள்விகளை விட்டுவிட்டு, தான் நன்றாக படித்த பகுதியிலுள்ள 7 கேள்விகளை தெரிவு செய்தான். நன்றாக பதில்களை எழுதினேன் என்ற மனத்திரு ப்தி அவனுக்கிருந்தது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இப்படியாக சில சோதனைகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாமா? ஆம் இந்த உலகத்தின் போக்கினால் உண் டாயிருக்கும் சோதனைகள் பலவற் றை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அவனவன் தன்தன் சுய இச்சையி னாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படாதிருக்கும்படி, ஆவிக் கேற்றபடி நடந்துகொணடால், அப் பொழுது அவன் மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பான். ஒருவன் எப்படி ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ள முடியும்? ஒருவன் தன் வழியை எப்படி சுத்தமாக காத்துக் கொள்ள முடியும்? தேவ ஆலோசனையைத் தன் உள்ளதிலே பதித்து வைத்து, எல்லாக் காவலோடும் தன் இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும். தேவ ஆலோசனையில் சிலவற்றை நாம் ஆராய்ந்து பார் ப்போம்: துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாதே. பாவிகளு டைய வழியில் நில்லாதே. பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கா ராதே. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவ ருடைய வேதத்தில் தியானமாயிரு. வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி விடு. ஐசுவரியவானாகும்படி பிரயாசப்படாதே. பரஸ்திரிய னின் வழியை நாடாதே. உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படு த்து. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது. உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக. உன் வழிகளெல்லாம் கர்த்தரை நினைத்துக் கொள். இப்படியாக அருமையான தேவ ஆலோசனைகளின்படி நடக்கின்ற நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிக திகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். அந்த பாதை யிலே இடுக்கண்களும், இடறுதலும் இல்லை.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, என்னுடைய சுய எண்ணங்களின்படி நடக்காமல், உம்முடைய ஆலோசனைகளின் வழியிலே நடந்து கண்ணிகளுக்கு தப்பிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105