தியானம் (மாசி 06, 2023)
தனிமை வாட்டும் நாளிலே!
சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
ஒரு மாணவனானவன், தன் பாடசாலை வாழ்க்கையிலே அதி முக்கிய மான ஒரு பரீட்சையை எழுதும் படிக்கு, குறித்த நாளிலே பரீட்சை மண் டபத்திற்குச் சென்றான். தனக்கு அறிமுகமான சக மாணவர்கள் அங்கே இருந்த போதும், இறுதிப் பரீட்சைக்கு இன்னும் சில நிமிடங்களில் முக ங்கொடுக்க வெண்டும் என்று அவன் மனதிலே ஒரு பதற்றம் நிலவியது. வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு, பரீ ட்சை ஆரம்பமாகியது. பாடங்களை நன்றாக கற்றிருந்தாலும், அடுத்த மூன்று மணித்தியாலங்களுக்கு தான் தனியா கவே பரீட்சையை செய்து முடிக்க வேண்டும் என்பதை சிந்தித்த போது அவன் சற்று கலங்கிப்போனான். இவ்வண்ணமாகவே நாமும் அனுதினமும் வேதத்தை வாசித்து, ஜெபி த்து வாழ்கின்ற போதும், சோதனைகள் எவ்விதத்திலும் நம் வாழ்க்கை யில் ஏற்படுகின்றது. நம்முடைய உயிர் உள்ளவரை இதை யாராலும் தவிர்க்க முடியாது. அந்த மாணவனானவன், தனியாக பரீட்சைக்கு முக ங்கொடுத்தது போல் நாமும் தனியே விடப்படும் நேரங்கள் நமக்கும் உண்டா கின்றது. சில சோதனையின் நாட்களிலே, கார்மேகங்களைப் வானத்தை மூடிக் கொள்வதைப் போல, பயமும் திகிலும் நம்மை சூழ் ந்து கொள்வ துண்டு. மரண இருளின் பள்ளத்தாக்கை கடப்பது போன்ற உணர்வு. இதை நான் தனியாக செய்து முடிக்க வேண்டுமே என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றது. தேவபிள்ளைகளாகிய, நாம் தனிமையாக இரு ப்பதில்லை. நாம் திக்கற்றோரைப் போல ஒருபோதும் கைவிடப்படுவதி ல்லை. நமக்கேற்படும் ஒவ்வொரு சூழ்நிலையையும் நாம் ஜெயம் கொள் ளும்படிக்கு, சத்திய ஆவியாக தேற்றரவாளன் நம்மோடு என்றென்று மாய் இருந்து சகல சத்தியத்திலும் நம்மை வழிநடத்த ஆயத்தமுள்ள வராக இருக்கின்றார். அவருடைய சத்தத்திற்கு நாம் செவிகொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். பயம் சூழ்ந்து கொள்ளும் போது, தேவனு டைய வாக்குத்தத்தத்தை அறிக்கையிடுங்கள். அவரை நம்புங்கள். அவர் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். 'நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.' என்று தம்மு டைய ஜனங்களுக்கு வாக்குரைத்த தேவன் என்றென்றும் நம்மோடு இரு க்கின்றார். மாம்ச எண்ணங்கள் தலைதூக்கும் போதும், பெலவீன ங்கள் ஆட்கொள்ள எத்தனிக்கும் போதும், கலங்காமல், அவருடைய நாமத் திலே நம்பிக்கையாயிருங்கள். அவர் உங்களை விடுதலையாக்கி வெற் றியின் பாதையில் நடத்துவார்.
ஜெபம்:
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை என்று சொன்ன தேவனே, சோதனையின் நாளிலே நான் விழுந்துவிடாமல் இருக்க நீர் என்னை பெலப்படுத்தி வெற்றியின் பாதையில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்
மாலைத் தியானம் - ஏசாயா 43:2