புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2023)

குறைவுகளை மேற்கொள்ளுங்கள்

சங்கீதம் 139:7

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?


ஒரு ஊரிலே வசித்து வந்த மாணவனொருவன், பத்தாம் ஆண்டில் சித்தி பெற்று உயர்தர வகுப்பிற்கு செல்வதற்கு, அந்த ஊரின் கல்வி த்திட்ட முறைமையின்படி அவன் தன் தாய்மொழியாகிய ஆங்கில பாடத்திலே சித்தி பெற வேண்டியிருந்தது. தான் எப்படியும் அந்தப் பாடத்தில் சித்திபெறுவேன் என்ற தன் நம்பிக்கை அவனிடத்திலிருந்தததால், அந்த பாடத்தைக் குறித்து அக்கறையில்லாமல் அவன் இருந்துவிட்டதி னால், சித்திபெறாமல் போய்விட் டான். அவன் மேற்கொண்டு உயர் தர வகுப்பிலுள்ள மற்றய பாடங் களை படிக்க முடியும், ஆனால், அவன் பத்தாம் ஆண்டை முடித்து அரசாங்க சான்றிதழை பெறுவத ற்கு அவன் ஆங்கில பாடத்திலே சித்தி பெறவேண்டியதாயிருந்தது. அவன் அதை பெற்றுக் கொள்வதற்கு, தன் மனநிலையை மாற்றி, ஆங்கில பாடத்தை மிகவும் கவனமாக கற்று, ஒப்படைகளை நிவர்த்தி செய்து, வீட்டுப் பாடங்களை கிரமமாக செய்தால், 10வது ஆண்டு பரீட்சையிலே அவன் இலகுவாக சித்தி பெற முடியும். ஆனால், தன் மனநிலையை மாற்றிக் கொள்ளாமல் அவன் அந்த ஊரிலுள்ள எந்த பாடசாலைக்கு சென்றாலும் அல்லது தான் வசிக்கும் ஊரைவிட்டு அந்த தேசத்திலுள்ள வேறு எந்த மாவட்டத்திற்கோ, மாகாணத்திற்கோ சென் றாலும் அவன் பத்தாம் ஆண்டு ஆங்கில மொழியிலே சித்தி பெறாமல் சான்றிதழை பெற முடியாது. பிரியமானவர்களே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து, இன்று நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தியானம் செய்வோமாக. சில வேளைகளிலே, சில தேவ பிள்ளைகள் கூட, தங்கள் குறைவுகளை இருக்கின்ற வண்ணமாக விட்டுவிட்டு, வேறு நன்மையான காரியங்களை செய்து கொள்கின்றார்கள் அல்லது தங்கள் குறைகளை அறிந்தவர்கள் மத்தியிலே வாழாமல், அறியாத இடங்களிலே சென்று அங்கே பெரிய காரியங்களை நடப்பிக்கின்றார்கள். எடுத்துக் காட்டாக, ஒரு விசுவாசியாவன் கசப்பையும் பகையையும் தன் உள்ளத்திலே வைத்துக் கொண்டு, தன் தேசத்தைவிட்டு, தூரதேசத் திற்கு சென்று அங்கே தன் அன்பை வெளிக்காட்டும்படி பெரிதான தானதர்மங் களையும் செய்து, அங்குள்ள விசுவாசிகள் மத்தியிலே பேர் பெற்றவனாக இருந்தான். ஆனால், அவன் மனதிலிருக்கும் கசப்பை அவ னைப் படைத்த தேவன் அறியாரோ? அவருடைய ஆவிக்கு மறைவாக அவன் எங்கே போக முடியும்?

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனே, உமக்கு மறைவாக காரியமொன்றுமில்லை. நான் என் குறைகளை மறைக்க வழிதேடாமல், அவைகளை மேற்கொள்ளும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:28