புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2023)

விழுந்த இடத்திலிருந்து

வெளிப்படுத்தல் 2:5

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக


வீட்டின் முற்றத்திலே ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியானவள், கல்லொன்றிலே தடுக்கி கீழே விழுந்து விட்டாள். இதனால் அவளு டைய கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டது. தன்னை மற்றவர்கள் பார்க் கின்றார்கள் என்பதைக் குறித்து பொருட்படுத்தாமல், விழுந்த இடத்தி லிருந்து, தன் கைகளை தன் தந்தைக்கு நேராக உயர்த்தி, தன்னை தூக் கிவிடும்படியாக அவள் சத்தமிட்டு அழுதாள். தந்தையாரும் ஓடிச் சென்று அவளை தூக்கி தன்னோடு அனை த்துக் கொண்டு, அவளை தேற்றினார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையி லும் நாம் விழுந்து போகின்ற சந்தர்ப்ப ங்கள் ஏற்படுவது ண்டு. அந்த விழுகை யானது, ஒருவேளை நம்முடைய தவ றினாலோ அல்லது சில வேளைகளிலே நாம் செய்த குற்றம் மற்றவர்களுடைய உந்துதலினாலோ உண்டாயிருக்கலாம். ஆனால், தற்போது அதன் விளைவு என்ன? நான் விழுந்து விட்டேன். அந்த வேளையிலே நாம் செய்யக்கூடிய ஞானமுள்ள காரியம் என்ன? பின்வரும் மூன்று பதில்களை ஆராய்ந்து பாருங்கள். 1. நான் என் ஆவிக்குரிய வாழ்க்கையிலே பின்னடைவை சந்தித்திருக்கின்றேன். நான் அப்படியே இருந்து விடப்போகின்றேன். 2. நான் விழுந்தது உண்மை ஆனால் அத ற்கு காரணம் அந்த மனிதனே. அவன் மனந்திரும்பும்வரை நான் இப்ப டியே இருக்கப் போகின்றேன். 3. ஆண்டவரே நான் விழுந்து விட்டேன். எனக்கு மனதுருகி என் மீறுதல்களை மன்னித்து, என்னை மறுபடி யும் தூக்கி நிறுத்துவீராக என்று என்னை தேவனுடைய பாதத்திலே ஒப்புக் கொடுக்கின்றேன். இவைகளை எதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். நாம் எந்தக் காரியத் திலே, எங்கே தவறுகின்றோமோ அந்த இடத்திலே நாம் நம் இருதயத்தை சரி செய்து தேவனுக்கு முன்பாக தேவனுக்கேற்ற கிரி யைகளை நாம் செய்ய வேண்டும். நாள்பட்ட புண்கள் மனைந்து நாற்ற மெடுப்பது போல, பாராமுகமாக விடப்பட்ட பாவங்களும் கிறிஸ்வ வாழ்வில் நல் வாசனை யை கெடுத்து விடும். சின்ன மகளானவள், தன் தகப்பனை நோக்கி பார் த்து வேண்டிக் கொண்டது போல, நாமும் தவறின காரியங்களிலிருந்து ஆதியில் கொண்ட அன்புக்கு திரும்பும்படி கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, என் மீறுதல்களை நான் மூடி மறைக்காமல், நான் தவறிப் போன இடத்திலிருந்து நிபந்தனையன்றி எழுந்திருந்து உம்மிடம் திரும்ப நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 38:18-22