தியானம் (மாசி 02, 2023)
இனி வரவிருக்கும் பலன்
மத்தேயு 5:12
பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்
என்னிடத்தில் அநேக நன்மைகளை பெற்றவர்களே, பெரிதான தீமைகளை எனக்கு செய்தார்கள் என்று ஒரு மனிதனானவன், தன் வாழ்வின் பாதையிலே தனக்குண்டான தீமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தான். அதை கேட்டுக் கொண்டிருந்த போதகரானவர் அவனை நோக்கி: மகனே, நீ உன் வாழ்வில் ஏற்பட்ட தீமைகளை அல்ல, நன்மைகளையே எப்போதும் எண்ணிப்பார். நீ தீமைகளை எண்ண விரும்பினால், உன் வாழ்நாட்களிலே நீ மற்றவர்களுக்கு செய்த தீமைகள் உண்டோ என்று உன்னையே நீ ஆராய்ந்து பார்த்து உன்னை சீர்திருத்திக் கொள். ஆனால், கிறிஸ்துவின் பொருட்டு நீ துன்பத்தை சகித்திருந்தால், அது உனக்கு தீமையல்ல, அது பாக்கியம் என்று வேதம் கூறுகின்றது என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன் பைவிட்டு நம்மைப் ஒன்றும் பிரிக்காது. எல்லா துன்பங்களின் மத்தியிலும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள் ளுகிறவர்களாயிருக்கிறோமே. என தேவ ஊழியராகிய பவுல் கூறியிருக்கின்றார். ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தேவ சித்தத்தை நிறைவேற்றுவதே முற்றும் ஜெயங்கொள்கின்ற வாழ்க்கையாய் இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு சிலுவையில் மரித்த போது, உலகத்தாரும், அதை சார்ந்தவர்களும் ஆண்வர் இயேசு தோற்றுவிட்டார் என்று நினைத்தார்கள். ஆனால், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை அவர் சம்பூரணமாக நிறைவேற்றி சிலுவையிலே வெற்றி சிறந்தார். அவர் சிலுவையிலே தொங்கும்போதே தனக்கு தீமை செய்தவர்களை மன்னிக்கும்படியாக, பிதாவவை நோக்கி வேண்டுதல் செய்தார். கிறிஸ்து இயேசுவிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; தீமை செய்வது தெய்வீக சுபாவத்திற்குரிய தன்மையல்ல. அவை மாச ம்சத்திற்குரிய தீய சுபாமாகயிருக்கின்றது. அவைகளின் நினைவுகயும் நம்மனதிலே தங்க இடங் கொடுக்க்கூடாது. ஆனால் தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது எனவே, நாம் கர்த்தருடைய பார்வையிலே விரோதிகளாக இருக்காதபடிக்கு, நாம் ஒருவனுக்கு தீமைசெய்யாதபடி எச்சரிகையாயிருக்க வேண்டும்.
ஜெபம்:
நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கும் தேவனே, நான் பொல் லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொரும்படிக்கு எனக்கு கிருபை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பேதுரு 3:12-17