புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2023)

முன்னோக்கிய பயணம்!

எபிரெயர் 12:1

விசுவாசத்தைத்துவக்குகிற வரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்


நான் நல் வழியில் வாழ்வதற்கு பல முயற்சிகளை எடுத்தாலும், என் உற வினர்களில் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் நான் தவறிப் போன காரி யங்களை சுட்டிக் காட்டி என்னை சோர்வடையச் செய்கின்றார்கள். நான் குற்றங்கள் செய்தது உண்மை ஆனால் அவை இப்போது என் னிடத் தில் இல்லை. சபையிலே வரும் ஒரு சிலரும்கூட என் பழைய காரியங்க ளைக் குறித்து மறைமுகமாக பேசி என்னை துக்கப்படுத்துகின்றார்கள் என்று ஒரு மனிதனானவன், தன் மன வேதனையை, சபை மேய்ப்பரிடம் கூறினான். அதற்கு சபையின் மேய் ப்பரானவர் மறுமொழியாக, மகனே, உன் பழைய வாழ்க்கையை பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், தங் கள் இருதயங்களிலே நீ வேண்டாம் என்று விட்டுவிட்ட அழுக்குகளை தூக்கி சுமக்கின்றார்கள். நீயோ, அவைகளை விட்டு ஓய்ந்து, கிறிஸ்து வுக்குள் தேவன் அழைத்த பந்தையப் பொருளின் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றாய். அவர்களோ, தேங்கி நிற்கும் அழு க்கான தண்ணீர் குட்டைகளைப் போல, ஒர் இடத்திலே தங்கள் வாழ்வை சிக்கவைத்து விட்டார்கள். ஆண்டவராகிய இயேசு தம்முடைய விலை மதிக்க முடியாத இரத்தத்தினால உன்னை கழுவி சுத்திகரித்து, உன் பாவங்களை மன்னித்து அகைளை மறதியின் கடலிலே எறிந்து விட்டார். அவர்கள் ஆண்டவர் இயேசுவுக்கு ஊழியம் செய்பவர்களாக இருந் தால், அவர் மன்னித்துவிட்டதை தூக்கி சுமக்க மாட்டார்கள். எனவே, நீ சோர்ந்து போகாமலும், தளர்ந்து விட்டுவிடாமலும், அவர்களோடு, நொந்து கொள்ளாமலும், அவர்களோடு சண்டை செய்யாமலும், அவர்கள் தங்களை கட்டிவைத்திருக்கும் பரிதாபமான நிலை மையிலிருந்து விடுதலையடை ந்து, பரிசுத்தமானவைகளால் தங்கள் இரு தயங்களை நிரப்ப வேண்டும் என்று அவர்களுக்காக கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய் என்று அவனு டைய மனக்கண்களை தெளிவாக்கினார். ஆம், பிரியமானவர்களே, நீங்கள் மற்றவர்களுடைய குறைவுகளிலும், குற்றங்களிலும் உங்களை கட்டி வைத்து விடாதீர்கள். சிலர் 10 ஆண்டுகளுக்கு முன்னர், வேறு சிலர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மற்றவர்களின் குற்றங்களிலே இன்னும் வாழ்கின்றார்கள். தேவன் கிருபையாய் கொடுத்த நாட்களை யோ வீணிலே போக்கடிக்கின்றார்கள். நீங்கள் அப்படியாக பின்னாவை களை நோக்கி ஓடாமல், மன்னித்து, மறந்து, கிறிஸ்து இயேசுவின் சாயலில் பெருகும்படியாக முன்னானவைகளை நோக்கி ஓடுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, முந்தினவைகளை சிந்தித்து துக்கித்துக் கொண்டிருக்காமல், நீர் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 3:13-14