புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2023)

சுத்த இருதயம் தேவை

எபிரெயர் 10:22

உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்


அப்பா, பாடசாலையிலே கணித பாடத்திலே தற்போது கற்பிக்கப்படும் பகுதி எனக்கு புரியவில்லை. மிகவும் கடினமாக இருக்கின்றது. தெருவிற்கு அப்புறமுள்ள, என்னுடைய நண்பனானவன், கணித பாடத்திலே மிகவும் அறிவுள்ளவன். மாலையிலே அவனுடைய வீட்டிற்கு சென்று கணிதம் கற்கப்போகின்றேன் என்று ஒரு மகனானவன், தன் தகப்பனானவரிடம் கேட்டுக் கொண்டான். இதை கேட்ட தகப்பனானவர், மகிழ்ச்சியோடே அனுமதி கொடுத்தார். கிழமைகள் கடந்து சென்ற பின்னரும், அவன் கணிதம் கற்கு ம்படி அடிக்கடி தன் நண்பனான வனின் வீட்டிற்கு சென்றுவருவதை கண்ட தகப்பனானவரின் மனதிலே கேள்வி எழ ஆரம்பித்தது. இவன் எப்பொழுதுமே கணித பாடம் மட்டும் தான் படிக்கின்றானா? பாடசாலையில் வேறுபாடங்கள் கற்பிப்பதில் லையா என்று தன் மனிதிலே யோசித்தபடி, ஒரு நாள், தன் மகனான வன், நண்பன் வீட்டிற்கு சென்ற பின், சற்று நேரம் தாழ்த்தி, அந்த வீட் டிற்கு சென்றார். அவருடைய ஆச்சிரியத்திற்கு, மகனானவன், தன் நண் பர்களோடு சேர்ந்து, புதிய கம்யூட்டர் விளையாட்டை சிரத்தையுடன் விளையாடுவதை கண்டார். அந்த மகனானவன், தன் இச்சையை நேர வேற்றும்படி, கணித பாடத்திலே தான் பெலவீனன் என்று காண்பி ப்ப தையே விரும்பினான். இன்று சில தேவ பிள்ளைகளும், தங்கள் உண் மையான குறைவுகளை வெளிக்காட்டாமல், சாமர்த்தியமாக, தேவ காரி யங்களை தவிர்த்துக் கொண்டு, தங்கள் ஆசை இச்சை களை நிறை வேற்ற நியாயமான சாட்டுப் போக்குகளை தேடுகின்றார்கள். எடுத்துக் காட்டாக, ஞாயிறு ஆராதனையை தவிர்;த்துக் கொள்ள, முக்கியமான வகுப்புக்கு செல்ல வேண்டும். ஆனால் அந்த வகுப்பு அவர்களுடைய மனவாஞ்சை அல்ல, எப்படியாவது சபை கூடிவருதலை தவிர்த்துக் கொள்ள ஒரு ஏற்புடைய வழி வேண்டும் என்பதே அவர்களுடைய உண் மையான மனவாஞ்சை. அவர்கள் எதை வாஞ்சிக்கின்றார்களோ, அதை அவர்கள் பெற்றுக் கண்டடைகின்றார்கள். இவர்கள் தங்கள் இச்சையை நிறைவேற்ற, தாங்கள் பெற்ற சுதந்திரத்தை ஒரு மூடலாக பயன்படுத்து கின்றார்கள். மற்றவர்களுடைய ஆதரவையும் அனுதாபத்தையும் பெற் றுக் கொள்ள சில பெலவீனங்களைவிட்டு விலக மனதில்லாதவர்களாக இருக்கின்றார்கள். நீங்களோ, மனதிலே தோன்றும் மறைவான இச்சை களை முற்றாக களைந்துவிட்டு, தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி வாஞ்சியுங்கள்.

ஜெபம்:

உண்மையாய் கூப்பிடுகின்றவர்களின் குரலைக் கேட்கும் தேவனே, என் இச்சைகளை மறைத்து வைக்காமல், நான் உண்மையுள்ள இருதயத்தோடு உம்மை சேவிக்கும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:13

Category Tags: