தியானம் (தை 30, 2023)
நடுநிலையான வாழ்க்கை?
யாக்கோபு 1:8
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்
ஒரு வீட்டிலே செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட பூனையானது, மதிலிலே ஏறியிருப்பது அதன் வழக்கமாக இருந்தது. அநேக நாட்கள் அது பல மணிநேரம் மதிலிலே இருந்தாலும், குறித்த நேரத்திற்கு அது தன் வீட்டிற்குள் வந்து சேர்ந்து விடும். இப்படியாக ஒருநாள், அந்தப் பூனை யானது, மதிலிலே இருக்கும் போது, பக்கத்து வீட்டு தோட்டத்திற்குள் ஒரு எலி ஓடுவதை கண்டு, தன் னையறியாமலே, அந்த வீட்டுத் தோட்டத்திற்குள் பாய்ந்து, அந்த எலியை பிடிக்கும்படி வேக மாக ஓடியது. பக்கத்து வீட்டிலே, பாது காப்பிற்காக வளர்க்கப்பட்ட நாயானது, துரிதமாக அந்த பூனை யை துரத்திச் சென்று, கடித்து காயப்படுத்தி விட்டது. இன்று சில தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையும் மதிலிலே இருக்கும் பூனையைப் போல மாறிவிடுகின்றது. அதாவது, அங்குமில்லை, இங்குமில்லாத நடுநிலை. நான் இப்படி இருந்தால் என்ன? நான் அங்கே சென்றால் என்ன? நான் பாவம் ஒன்றும் செய்யவில்லையே? ஆம், அது உண்மை! அதாவது இன்னும் பாவம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இனிமேல் சுயமானது சோதிக்கப்படும் வேளை வரும்போது, தங்களை அறியா மலே தவறான பக்கத்திலே விழுந்து விட தங்களை ஒப்புக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஒரு விசுவாசியாவன், உலகத் தின் போககிற்கும், கிறிஸ்துவுக்கும் இடையில் நடுநிலையாக இருக்கின்றேன் என்று சொல்வாக இருந்தால், அவன் எந்தப் பக்கத்தையும் சாராதவனாகவும், சந்தேகமுள்ளவனும், மனதில் கேள்வி நிறைந்தவனும், இரண்டு தோணிகளிலே கால்களை வைப்பவனைப் போலவும் அனலுமின்றி, குளிடூமின்றி வாழும் நிலையற்ற மனதையுடையவனாகவும் இருப்பான். சோதனையின் நாளிலே, தன்னை அறியாமல் மதிலிலே இருந்து பாய் ந்து சென்ற அந்தப் பூனையின் சுயம் வெளிப்பட்டது போல, இருமனமுள்ளவர்களுடைய சுபாவமுகங்களும்; வெளியரங்கமாகும். பிரியமானவர்களே, நாம் தேவனிடத்தில் எதையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், விசுவாசமுள்ளவர்களாக அவரிடத்தில் கேட்க வேண்டும். சந்த கேமில்லாதவர்களாக அவரிடத்தில் சேர வேண்டும். இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். இரண்டு எஜமா ன்களுக்கு ஒருவனாலும் சேவை செய்ய முடியாது. எனவே, நீங்கள் நிலைதவறாதவர்களாய், கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டும் என்ற மனவாஞ்சையுடையவர்களாக வாழுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் என் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொண்டு, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே என் மனவாஞ்சையாக கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 3:15