புதிய நாளுக்குள்..

தியானம் (தை 29, 2023)

பெலப்படுத்துகின்ற கிறிஸ்து

2 நாளாகமம் 14:11

கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்


'உங்களைப் போல எனக்கு ஞானமில்லை. நீங்கள் அனுபவத்தில் முதிரந்தவர், நானோ சிறுமையானவன். பெலவீனமுள்ளவன்' என்று தன் நிலைமையைக் குறித்து ஒரு விசுவாசியானவன் அவ்வப்போது தன் போதகரோடு பேசும் போது கூறிக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அவன் அவ்வண்ணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, அவனை நோக்கி: மகனே, நான் உயிரோடிருக்கும்வரை, எந்த ஒரு ஆண்டிலும், நீ என்னுடைய வயதை தாண்டிச் செல்லப் போவ தில்லை. நான் உன்னைவிட வய த்திற்கு மூத்தவனாக இருந்தும், கர்த்தரை அறியும் அறிவிலே வளர்ந்து கொண்டிருக்கின்றேன். கர்த்தருக்கு பயந்து, அவர் வழி யில் நடக்கின்ற யாவரையும் கர்த்தர் தம் வழியிலே நடத்திச் செல்கி ன்றார். பெரியர், சிறியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. 'உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறப டியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.' (சங் 119:100) என்று வேதத்திலே வாசிக்கின்றோம். நீ ஞானத்திலே என்னிலும் குறைவுள்ளவன் என்று கருதினால், என் ஆலோசனையை இன்று கேள்: நீ ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவரு மாகிய தேவனிடத்தில் கேளு, அப்பொழுது அது உனக்குக் கொடுக் கப்படும். நாம் யாவருமே பெலனில்லாதவர்களாய் நாட்களை கடக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் நமக்கு உண்டாவதுண்டு. ஆனால் அது எப்போதும் என் துர்குணத்தை மூடி மறைக்கு சாட்டுப் போக்காக இருக்க முடியாது என்று அவனை கடிந்து கொண்டு அறிவுரை கூறி னார். ஆம் பிரியமானவர்களே, சாமுவேல் சிறு பையனாக இருந்த வேளை யிலே, தேவனானவர் பிள்ளையாண்டானோடு பேசி நடத்தினார். தானியேலும் நண்பர்களும் இளம் வாலிபர்களாக, பபிலோனுக்கு சிறை ப்பட்டுப் போன போதிலும், தேவனுடைய காரியங்களிலே அவர்கள் வைராக்கியமாக இருந்தார்கள். தேவன் அவர்களுக்கு வேண்டிய ஞான த்தையும் பெலத் தையும் கொடுத்தார். எனவே, நீங்கள் எந்த வயதுடை யவர்களாயிருந்தாலும், எந்நிலையிலிருந்தாலும், தேவனுடைய வார்த் தையிலே நிலைத்திருங்கள். அப்போது சூழ்நிலைகளை ஜெயம் கொள்ள தேவன் நம்மை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

என்னை பெலப்படுத்துகின்ற தேவனே, என்னை பெலப்படுத்து கின்ற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்னும் அறிக்கை எப்போதும் என் நாவில் இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13