புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2023)

வஞ்சிக்கப்படாதிருங்கள்!

1 தெச 5:22

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்


ஆதியிலே பாவமேமில்லாத மனித வாழ்வினில், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது. காரியம் அப்படியானால், பொல் லாங்கனுக்குள் கிடக்கும் தற்போதைய கோணலும் மாறுடுள்ளது மான உலகத்திலே தேவபிள்ளைகள் வஞ்சிக்கப்பட்டுப்போவது எவ்வளவு அதி கமாக இருக்கும்? இப்படியாக அப்போஸ்தலராகிய பவுல், தேவ அழை ப்பை பெற்றவர்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையி னின்று, விலகும்படி கெடுக்கப்ப டுமோவென்று பயந்திருந்திருந் தார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானர், நாம் பொல்லாங்கனை ஜெயங் கொள் ளும்படிக்கு, தம்முடையவிலை மதிக்கமுடியாத இரத்தத்தினாலே, புதிதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டு பண்ணியிருக்கின்றார். போர்க்கள த்திலே நிற்கும் போர்வீரன், எதிராளியை ஜெயிக்கும்படிக்கு, எப்படி யாக ஆயுதவர்க்கத்தை தரித்துக் கொள்கின்றானோ, அதுபோல நாமும் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர் களாகும்படி தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும், தரித்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் எபேசியர் ஆறாம் அதிகாரத்தில் படிக்கலாம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு இந்த உலகிலே தம்முடைய திருப்பணியை வெளியரங்கமாக ஆரம்பித்த நாட்களிலே, பொல்லாங்கனினாலே சோதி க்கப்பட்டார். பொல்லாங்கன் அவரிடத்தில் எப்படியாக பேசினான் என் பதை உற்றுக் கவனியுங்கள். ஆண்டவர் இயேசு கடும் பசியாய் இருந்த வேளையிலே, பசியை ஆற்றுவதற்கு வழியை காட்டு பவனைப் போல வந்தான். இரட்சகராகிய இயேசு எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக, இரட்சிப்பின் அதிபதியாக உயர்த்தப்படுவார் என்றறிந்து, தன்னை வண ங்கினால், உலக அதிகாரங்கள் முழுவதையும் இரட்சகர் இயேசுவுக்கு கொடுக்கின்றேன் என்று ஒரு குறுக்கு வழியை காண்பித்தான். நீர் தேவ னுடைய குமாரன் தானோ? என்று உறுதிப்படுத்தும்படி வேதவாக்கிய த்தை கூறி அவருடைய தேவத்துவத்தை சோதித்தான். அதுபோலவே, நம்முடைய நாளாந்த வாழ்க்கையில், கல்வி, தொழில், தேவைகள், திரு மணம், பிள்ளைகள், கொண்டாட்டங்கள், நண்பர்கள் உறவுகளின் ஐக் கியம் இவற்றை கொண்டே நம்மையும் அவன் வஞ்சிக்க சுற்றித் திரி கின்றான். எனவே நாம் எப்போதும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக் கும்படி தேவ வார்த்தையில்; நிலை கொண்டவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் பிசாசின் வஞ்சகமான வலைக்குள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8