புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2023)

செழிபாக வளரும் களைகள்

சங்கீதம் 1:3

தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்


ஒரு மனிதனானவன், தன் வீட்டின் சிறிய தோட்டத்தை பண்படுத்தி, விதைகளை விதைக்க முன்னதாவே, களைகள் செழித்து வளருவதைக் கண்டு கொண்டான். அந்த களைகள் வளருவதற்கு, அவன், தான் எந்த பிரயாசத்தையும் எடுக்க வேண்டியதில்லை என்பதைக் குறித்து ஆச்ச ரியப்பட்டான். ஆனால் அந்த களைகளினால் யாருக்கும் எந்தப் பலனும் உண்டாகவில்லை. அவைகள், அங்கி ருந்து சீக்கிரமாய் அகற்றப்பட்டு, சுட் டெரிக்கப்பட்டது. ஆதாமின் மீறுதலின் நாளிலிருந்து இந்தப் பூமியானது அவன் நிமித்தம் சாபத்திற்குள்ளானது. அது இலகுவாகவே முள்ளும் குரு க்கும் முளைப்பிக்கும்; தன் மையுடை யதாக மாறியது. எனினும், தேவ கிரு பையினாலே சாபத்திற்குள்ளான நில மும், பலன் கொடுக்கும் நிலமாக மாற்றமடைய முடியும். அந்த பண்ப டுத்தப்பட்ட நிலமானது, நல்ல விதைகளை முளைபித்து நற்பலன்களை கொடுக்கும். களைகள் இந்தப் பூமியில் செழிப்பாக முளைப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட அந்த மனிதனாவனனைப் போல, இன்று சில தேவ பிள் ளைகளும், துன்மார்க்கரின் செழிப்பான வாழ்வை கண்டு ஆச்சரியப்படு கின்றார்கள்: 'மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர் களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறு மாப்பாய்ப் பேசுகிறார் கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளா யிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்' என்று காரியம் அறி யாத மூடர்களைப் போல தங்கள் இருதயத்திலே எண்ணிக் கொள்கின் றார்கள். பிரியமானவர்களே, பண்படுத்தப்படாத நிலத்திலே களைகள் பெருகுவதைப் போலவே, கோணலும் மாறுபாடான சந்ததி இந்த உல கத்திலே பெருகியிருக்கின்றது. முடிவிலே துன்மார்கருடைய வாழ்க் கையினால், அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்தப் பல னும் உண்டாகுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை காற்றுப் பறக்கடி க்கும் பதரைப்போல் இருக்கின்றது. அதை நீங்கள் தியானம் செய்யா மல், உங்கள் வாழ்க்கையாது, நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போ லிருக்கும்படி தேவ வார்த்தையின் வழியிலே வாழுங்கள். தேவனு டைய கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவ ர்மேல் நம்பிக்கையாயிருங்கள். உங்கள் நம்பிக்கை ஒரு நாளும் வீண் போகாது.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, தீமைகளை இலகுவாக பிறப்பிக்கக் கூடிய உலகத்திலே, எனக்கோ, உம்மை அண்டிக்கொண்டிருப்பதே நலம் என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:1-28