புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2023)

இனி நல்ல நாட்கள் வருமோ?

எபிரெயர் 10:23

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.


நாங்கள் வாழ்ந்த முன்னைய நாட்களைப் போல தற்போது இல்லை. உலகமானது தினமும் மாறிக் கொண்டே போகின்றது. அந்த நாட்கள் இனித் திரும்ப வருமா? என்று ஒரு வயது முதிர்ந்த பாட்டனார் கூறிக் கொண்டார். ஆம், யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள் விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல் லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனா லும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ் யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைக ளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு முன்னெச்சரிப்பை கொடுத்திருக்கின்றார். இதனால் நாம் சோர்ந்து மனச்சலிப்படைந்து போகும்படிக்கு அல்ல, மாறாக, நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை விட்டு விலகாதபடிக்கு, அதிலே உறுதியாய் தரித்து நிற்கும்படிக்கே அவர் நமக்கு இவைகளை முன்னதாகவேக் கூறியிருக்கின்றார். உலகமா னது நவீனமயமடைந்து, அபிவிருத்தி அடைந்து வருகின்றது எனவே மனி தர் களுடைய வாழ்க்கைத் தரமானதும் மேன்மைப் படுத்தப்படுகின்றது என்று சில மனிதர்கள் கூறிக் கொள்கின்றார்கள். தேசங்களுக்கிடையே ஐக்கியமுண்டு என்று சில ஸ்தாபனங்கள் சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால், ஊடகங்கள் வாயிலாக நாம் கேள்விப்படும் செய்திகள் அந்த கூற்றுக்க ளுக்கு ஒத்ததாக இருக்கவில்லை. அசைவில்லாத ராஜ்யத்தை நோக்கி ஜீவ யாத்திரரையை தொடர்ந்து கொண்டிருக்கும் நாம், பலவி தமான சவால்களுக்கு நாளுக்கு நாள் முகங்கொடுக்கின்றோம். அவை களை கண்டு மனம் தளர்ந்து விடாதிருங்கள். உலகமும், அதன் போக் கும் பொல்லா ங்கனுக்குள் கிடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19). திருடனாகிய பொல்லாங்கன் கொல்லவும் அழிக்கவுமே யன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால், நம்முடைய பிதாவாகிய தேவ னின் வாக்குத்தத்தமானது மாறாதது. நித்திய ஜீவனை உங்களுக்கு தரு வேன் என்பதே அவருடைய வாக்குத்தத்தம். எனவே, ஜெபத்திலே உறு தியாய்த் தரித்திருங்கள். உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்;. நீங் கள் ஆண்டரா கிய இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையிலே சந்தோ ஷமாயிருங்கள்;.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, நாட்களைஉயும் காலங்களையும் பார்த்து நாம் சோர்ந்து போகாமல், உம்முடைய வார்த்தையிலே நிலைகொண்டு, உறுதியாய் தரித்திருக்க பெலன் தந்து நடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:33