புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2023)

குற்றங்களை மன்னிக்கும் தேவன்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


மேற்கத்தைய நாடொன்றிலே, பாடசாலைக்கு சென்ற மாணவனொரு வன், குறித்த குற்ற செயலொன்றிலே அகப்பட்டதால், சில கிழமைகள் பாடசாலைக்கு வராதபடிக்கு இடைநிறுத்தப்பட்டான். பாசடாலையின் ஒழுங்கு முறைகளின்படி, அந்த மாணவனின் குற்றமானது, பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தெரியப்படுத்தப்பட்டது. அத்துடன், அந்த தேசத் திலுள்ள எல்லா பாடசாலையின் அதி காரிகளும் அறிந்து கொள்ளும்படிக்கு, குற்றமானது, மாணவனின் தக வல் அறிக்கைகை அடங்கிய ஆவணத்திலே பதிவு செய்யப்பட்டது. அவனுடைய சகமாணவர்களும் நண்பர்களும் அவனை விசாரித்த போது, அவன் தன் தந்தை வேலை காரண மாகதேசத்திலுள்ள வேறொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டியிருக்கின்றதென்றும் அத்துடன் இந்த பாட சாலையில் விளையாட்டுதுறையில் முன்னேறுவதற்கான பயிற்சிகள் போதாதென்றும் இதினிமித்தம் நாங்கள் குடும்பமாக அங்கே செல்லப்போகின்றோம் என்றும் கூறினான். பிரியமானவர்களே, மனிதர்களுடைய வாழ்க்கையிலே தவறுகள் நடப்பதுண்டு. சபை ஐக்கியங்களுக்கு செல்லும் விசுவாசிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். குற்றம் செய்த அந்த மாணவனானவன், அவன் எங்கிருந்தாலும், மனம் மாறினவனாய், தன் வாழ்வில் நல்ல ஒரு ஆரம்பத்தை உண்டாக்குவானாக இருந்தால் அது மிகவும் நன்மையானது. ஆனால் அவன் குணமடைய விரும்பாமல், தன் குற்றத்தை தன் இருதயத்திலே வைத்திருப்பானேயானால், அவன் எந்தப் பாடசாலைக்குச் சென்றாலும் அவன் குற்றம் அவனுக்கு ள்ளேயே இருக்கும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும்கூட, முதலாவதாக, நாம் நம்முடைய பிரதானமான இலக்காகிய நித்திய ஜீவனை நம் மனக்கண்கள் முன்னே எப்போதும் வைத்திருக்க வேண்டும். நம்முடைய குறைகள் மனிதர்களுக்கு மறைவாக இருக்கலாம் அல்லது நாம் சில காலம் வெற்றிகரமாக மறைத்துக் கொள்ளலாம். ஆனால், தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. குற்றம் செய்தவன், தன் குற்றங்களு க்கு சாட்டுப் போக்குகளை கூறாமல், இவைகளை மனதார தேவனிடம் அறிக்கையிட்டால், அவன் எங்கிருந்தாலும், அவர் அவனை மன்னிக்க தயை பெருத்தவராயிருக்கின்றார். ஒரு வேளை உலக அதிகாரங்கள் மனிதர்களுடைய குற்றங்களை பதிவு செய்து வைக்கலாம். ஆனால், தேவன் ஒரு குற்றத்தை மன்னித்தால் அவர் அதை மறு படியும் நினை ப்பதில்லை. (சங்கீதம் 103:12, ஏசாயா 43:25)

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரிமுள்ள தேவனே, நான் என் குற்றங்களை மறைக்காமல், குற்றங்களை மன்னிக்கின்ற உம்மை நோக்கிப் பார்த்து, வாழ்வடையும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மீகா 7:19