புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2023)

நீதிமான்களின் கடிந்து கொள்ளுதல்

நீதிமொழிகள் 19:27

என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் போதகங்களை நீ கேளாதே.


ஒரு அனுபவமிக்க ஆசிரியரானவர், தன் அயலிலுள்ள மாணவர்களுக்கு மாலை நேரங்களிலே பல பாடங்களை முறைப்படி கற்பித்து கொடுத்து வந்தார். மாணவர்கள் பாடங்களிலே மட்டுமல்ல, ஒழுக்கத்திலும், மனித தயவிலும் வளர வேண்டும் என்று மாணவர்களுடைய எதிர்கால வாழ் க்கையைக் குறித்தும் கரிசனையுடையவராக இருந்தார். குறிப்பிட்ட ஒரு வருடத்திலே, அவரிடம் வந்த ஒரு மாணவனானவன், வகுப்பிலே சில குழப்பங்களை ஏற்படுத்த ஆரப்பித்தான். அந்த மாணவ னானவன், தன் வாழ்க்கை யிலே ஒழுங்குபடுத்த வேண்டிய காரி யங்களைக் குறித்தும், அவன் அதை தற்போது ஒழுங்கு படுத் தாவிடின், அதனால் வரப்போகும் பின்விளைவுகளைக் குறித்தும் அந்த மாணவனானவனுக்கு தெளிவாகக் கூறி, அவனைக் கடிந்து கொண்டார். ஆசிரியரின் ஆலோசனையை பொருட்படுத்தாமல், வீடு சென்ற அந்த மாணவனானவன், ஆசிரியர் பாடங்களை படிப்பிக்காமல், தன்னை அவமானப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார் என்று பெற்றோரிடம் கூறினான். தங்கள் மகனானவனின் குறைவை அறிந்திருந் தும், அவன் திருந்த காலம் இருக்கின்றது என்று பாரமுகமாக அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அந்த ஆசிரியரோ, அந்த மாணவனைக் குறி த்த மறைவான குறைகளை வேறு யாருக்கும் வெளிப்படுத்த விரும்ப வில்லை. அதை தனக்கு ஆதயாமாக்கிக் கொண்ட அந்த மாணவனா னவன், தன்னுடைய சீர்கேடான காரியங்கள் மற்றவர்களுக்கு தெரியும் முன்பாக, அந்த வகுப்புக்கு செல்லும் சில சக மாணவர்களின் மனதை யும் குழப்பி விட்டான். இந்த ஆசிரியருக்கு வயதாகிவிட்டது, பாடங் களை கற்பிக்கத் தெரியாது. மாணவர்களின்மேல் அன்பு இல்லை என்று கூறியதினிமித்தம் சிலர் அந்த ஆசிரியரின் வகுப்பைவிட்டு சென்றுவிட் டார்கள். பிரியமானவர்களே, இன்று அன்பு என்ற போர்வையின் கீழ், காலத்திலே கொடுக்கப்பட்ட வேண்டிய தேவனுடைய சிட்சையை அற்ப மாகக் கருதி, தங்கள் குற்றங்களை மறைக்கும்படிக்கு, மற்றவர்களையும் வஞ்சித்துக் கொள்கின்றவர்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாயி ருங்கள். அவர்கள் தங்கள் பேச்சிலே சமார்த்தியமுள்வர்களாக இருப்ப தினால், அவர்களுடைய கனிகளால் மட்டுமே அவர்களை அறிந்து கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தையிலே உறுதியாயிருங்கள். உங்கள் வருங்காலத்தை குறித்து கரிசனையுள்ள நீதிமான்களின் ஆலோசனை களை சமகால இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தள்ளி விடாதிருங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, கடிந்துகொள்ளும் போது, அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்பதை கண்டுணரும்படிக்கு ஞானமுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 141:5

Category Tags: