புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2023)

மாயமற்ற கனிகள்

1 கொரிந்தியர் 5:6

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?


ஒரு வியாபாரியொருவன், விற்பனைக்காக தன் களஞ்சியத்திலே மிக ம் சுவையான அப்பிள் பழங்களை பத்திரப்படுத்தி வைத்திருந்தான். ஒரு இராத்திரியிலே, களுஞ்சியத்தை மூடும் வேளையிலே, தன் பிள் ளைகளிலொருவன், களஞ்சியத்தின், பொருட்களை பாதுகாக்கும் ஒழு ங்கு முறைகளில் ஒன்றை தவறவிட்டதாலே, காலையிலே, சில பழங்கள் பழுதடைந்திருப்பதைக் கண்டான். காலம் தாமதிக்காமல், அவன் தன் னிடமிருந்த அப்பிள் பழங்கள் யாவை யும் பரிசோதனை செய்து, நலமான வற்றை பிரித்தெடுத்து, பழு தடை ந்த பழங்களை உடனடியாக களஞ் சியத்திற்கு அப்புறமாக இரு க்கும் குப்பைத் தொட்டியிலே போட்டுவிட்டான். தவறு நடந்தது உண்மை. அதனால் அவனுக்கு சில நஷ;டங்கள் ஏற்பட்டது. அதனால், அவன் தன் னிடம் இருப்பதையும் முற்றாக இழந்து விடாமல், பழுதாகிப்போன கனி களை தன் களஞ்சியத்திலிருந்து தூரமாக அகற்றவிட்டான். ஆம் பிரிய மானவர்களே, இந்த உலகிலே வாழும்வரை, நம்முடைய வாழ்க்கை யிலே தவறுகள் நடப்பதை தவிர்த்துக் கொள்ள முடியாது. சில வேளை களிலே நாம் எச்சரிக்கையாக இருந்தாலும், நம்மை சூழ உள்ளவர்க ளால் நமக்கு நஷ;டங்கள் ஏற்படலாம். அவர்கள் இந்த உலகத்திற்குரி யவர்களாகவோ, சபை ஐக்கியத்திலுள்ளவர்களாகவோ அல்லது உடன் பிறப்புக்களாகவோ கூட இருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும், அழுகிப்போன கனிகளை நாம் நம் களஞ்சியமாகிய உள்ளத்திலே சேர் த்து வைப்பதினால் நன்மைகள் ஒன்றும் நடைபெற போவதில்லை. மாறாக, அவைகள் நம்முடைய வாழ்வின் நலமானவைகள் யாவையும் கெட்டுப் போக பண்ணிவிடும். புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்தமாவனை த்தையும் உப்பப்பண்ணும். (கலாத்தியர் 5:9) ஆதலால் கிறிஸ்துவை அறிய முன்பு இருந்த பழைய வாழ்க்கையின் சுபாவங்களாகிய துர்க்கு ணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, புதிய மனுஷனுக் குரிய துப்புரவு உண்மை என்னும் ஆவிக்குரிய கனியாகிய புளிப்பில் லாத அப்பத்தோடே நாம் கர்த்தருக்குள் வாழ்கின்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பெலவீனமடைந்திருக்கும் போது, தங்களது சொந்த இலாபத்திற்காக, நீங்கள் ஆதியிலே கற்றுக் கொண்ட போதனையை விட்டு விலகும்படிக்கு, உங்களை வேறுவிதமாய் சிந்திக்கும்படிக்கு வஞ் சிக்கின்றவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஒப்புரவா குதலுக்கு எதிரான போதனைகளை தந்திரமாக செய்கின்றவர்கள். எனவே, ஆகாதவைகள் யாவற்றையும் உங்களை விட்டு அகற்றிவிடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகத்தினால் உண்டாகும் மாயமான கனிகளை குறித்து மேன்மைபாராட்டாமலும், தெளிந்த பத்தியுள்ளவர்களாக இருக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:17-20

Category Tags: