தியானம் (தை 22, 2023)
பரிசுத்தமும் நீதியும்
சங்கீதம் 24:3
யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர், தன் இளவயதிலே வருமான வரியை கணக்குப் பார்த்து சமர்ப்பித்த மனிதனானவன், மனக் கணிதத்தால் தான் செலுத்த வேண்டிய வரியை கணக்கு பார்த்த போதும், அதை முறைப் படி நீதியான முறையிலே கணக்கிட்டு, தான் செலுத்த வேண்டிய தொகை யை வரித் திணைக்களத்திற்கு செலுத்தி வந்தான். ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு, சில கணக்கிடும் கரு விகளானது கண்டு பிடிக்கப்பட்டது. அவன் அவைகளை உபயோகித்த போதும், தன் நீதியிலிருந்து சற்றும் விலகாதவனாகவே இருந்து வந்தான். காலங்கள் சென்று, தொழில்நுட்பம் பெரிதாக வளர்ச்சியடைந்து, கம்யூ ட்டர், மற்றும் இணையத்தளத்தை உப யோகித்தபோதும், அவன் தன் நீதியின் நிலையிலிரு ந்து ஒருபோதும் வழுவிப்போகவில்லை. ஏனெனில், அவன் தேவனுக்கு பயப்படுகின்ற கபடற்ற நீதிமானாக இருந் தான். காலங்களோ, காலத்தால் உண்டான நாகரீகங்களோ அவன் எண்ணத்தை மாற்ற முடியவில்லை. அவன் நாக ரீகத்தையும், நவீன உபகரணங்களையும், துரிதமாக நன்மையை நிறை வேற்றவே பயன்படுத்தினான். ஆனால், அதே வேளையிலே, திருட்டு தனமான உள்ளத்தை கொண்ட சிலர், காலங்கள் மாறி, நாகரீகம் அடை யும் போது, அவர்களுடைய மனம் மாறிப்போவதில்லை. அதாவது அவர்க ளுடைய திருட்டுத்தனங்களும் நாகரீகம் கூடவே அடைந்து விடுகின்றது. அதுபோலவே, உண்மையாய் தேவனுடைய பிள்iளாய் இருக்கின்ற வன், அவன் எந்த யுகத்திலே வாழ்ந்தாலும், அவன் தேவ நீதியை விட்டு விலகுவதில்லை. அவனுடைய நடை, உடை, பாவனை யாவும் பக்திவி ருத்திக்கேற்றதாகவே இருக்கும். அவன் தேவ ஆலோசனைக்கு ஒரு போதும் எதிர்த்து நிற்கமாட்டான். மாறாக, அவன் நீதிமானின் கடிந்து கொள்ளுதலையும் நல் மனதோடு ஏற்றுக் கொள்வான். பிரியமானவர் களே, பர்வதங்கள் தோன்றுமுன்னும், பூமியும், உலகமும் உருவாக் கபட முன்னும், அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கின்ற தேவனாகிய கர்த்தர் மாறாதவராயிருக்கின்றார். அவருடைய பரிசுத்தமும் நீதியும் காலத்தோடு ஒருபோதும் மாறிப்போ தில்லை. அவருடைய பிள்ளைகளா கிய நாமும் காலத்தோடு மாறிப் போகின்றவர்கள் அல்லர். எனவே, நீங் கள் எந்தத் தலைமுறையை சேர்ந்தவர்களாக இந்தாலும், உங்கள் கைக ளின் கிரியைகளிலே சுத்தமுள்ளவர்களாவும், இருதயத்தில் மாசில்லாத வர்களுமாயிருந்து, உங்கள் ஆத்துமாவை மாயைக்கும் கபட்டிற்கும் விலக்கி காத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
நீதியும் பரிசுத்தமுள்ள தேவனேஇ உமது ஆலோசனைகளை நான் தள்ளிப்போடாமலும்இ கடிந்து கொள்ளுதலை வெறுக்காமலும்இ உம் வார்த்தைகளின்படி அவைகளை நல்மனதோடு ஏற்றுக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 145:17