தியானம் (தை 21, 2023)
புது யுகம் புதிய தலைமுறை
எபேசியர் 6:3
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
தான் பட்ட கஷ;டங்களெவைகளையும் தன் இரண்டு பிள்ளைகளும் படக்கூடாது என்றும், வேலை செய்யும் இடத்திலே தான் சகித்துக் கொண்ட அவமானங்களை தன் பிள்ளைகள் சந்திக்கக் கூடாதுதென்ற எண்ணத்துடன், ஒரு தகப்பனானவர் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வேண்டிய பல காரியங்களை செய்து கொடுத்தார். அவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து, நல்ல பாடசாலையிலே சேர்த்து, பற்பல துறைகளிலே அவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்து வந்தார். காலங் கள் கடந்து பிள்ளை கள் வளர்ந்து நல்ல உத்தியோகங்களிலே அமர்ந் தார்கள். ஒருநாள், தன் பிள்ளைக ளோடு ஒரு காரியத்தைக் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, பிள்ளைகளின் ஒருவன் தன் தகப்பனான வரை நோக்கி: அப்பா, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது, நாட்டின் நடப்புக்களும் உங்களுக்கு புரியாது. இது புது யுகம். புதிய தலைமுறை. நீங்கள் உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று கடினமான தொனியுடன் அவருக்கு கூறினான். அதை கேட்ட தகப்பனா னவர் மனமானது மிகவும் வேதனைப்பட்டது. சற்று அமைதியாக இரு ந்து தன்னைப் பெலப்படுத்திக் கொண்ட தகப்பனானவர், தன் மகனை நோக்கி: நீ சொல்வது உண்மை தான் மகனே! எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. நாட்டு நடப்புக்களும் தெரியாது. புது யுகத்தையும் நான் அறியேன். ஆனால், எனக்கு என் பெற்றோரோடு எப்படி பேசுவது என்றும், எப்படி அவர்களை கனப்படுத்துவது என்றும், எப்படி என் பிள் ளைகளுக்கு அன்பு காட்டுவது என்றும் எனக்கு தெரியும் என்று கூறி அவர் தன் படுக்கைக்கு சென்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, காலங்கள் மாறிப்போகாலாம். ஒரு தலைமுறை ஒழிந்து புதிய தலை முறை வரலாம். உலகம் நவீன மயமடையலாம். ஆனால், கர்த்தருடைய வார்த்தைகள் காலத்தோடு ஒருபோதும் மாறிப்போ வதி ல்லை. அவை களுக்கு விரோதமான பிரமாணங்கள் ஒன்றும் நிலைநிற் பதுமில்லை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், அவருடைய வார்த் தைகளில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழி ந்து போகாது. புது யுகமமானது பெற்றோரின் ஆலோசனைகளை அற்பமாக எடுக்கும்படி கற்பிக்குமாயிருந்தால், அது தேவானல் உண்டான யுகம் அல்ல. நன்மையையும் நீடித்த ஆயுசையும் விரும்புகின்றவன் தன் பெற்றோரை கனம் எப்போதுமே பண்ணுகின்றான்.
ஜெபம்:
என்றும் மாறாத தேவனே, மாறும் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் வாழும் படிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 45:10