புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2023)

இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்

2 கொரிந்தியர் 8:11

கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.


ஒரு குடும்பத்தினர், வருட இறுதியிலே தாங்கள் அடுத்த வருடத்தில் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களையெல்லாம் பட்டியல்படுத்தி அவற்றிற்கேட்ப திட்டம் போடுவது வழக்கமாக இருந்தது. அந்தப் பட்டியலிலே வறியவர்களுக்கு உதவி செய்வதுதென்பதும் தவறாமல் இடம் பெற்றிருக்கும். வறியவர்க ளுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகிய அவர்கள், அதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்திருந்தார்கள். ஆனா லும், வருடம் ஆரம்பித்து, குடு ம்பத்தில் பல விதமான காரிய ங்கள் இடம் பெறும் போது, வறி யவர்களுக்கு உதவுவதானது அவர்கள் பட்டியலில் முக்கிய த்துவ வரிசையிலிருந்து கீழே போய் கொண்டிருந்தது. வறியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்த போதும் அதை அவர்களால் செயற்படுத்தப்பட முடியாமல்இருந்தது. இப்படியாக வருடங்கள் கழிந்து கொண்டிருந்தது. வீட்டுக் காரியங்கள் ஒழுங்கிற்கு வரும்போது, வருங் காலங்களிலே இதை நடப்பிப்போம் என்று அவர்கள் கூறிக் கொள்வார்கள். வறியவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் திட் டம் இப்போது அவர்களது எதிர்காலக் கனவாக மாறிவிட்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்தின் வாழ்க்கைத்தரத்தினால் உண்டாகும் அழுத்தம் ஒருபோதும் ஓய்து போவதில்லை. தேவைகளானது ஒன்றின்பின் ஒன்றாக அதிகரித்துக் கொண்டே போகின்றது. சாவல்களும் அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றது. இவைகள் மத்தியிலே, நீங்கள் தானதர்மங்களை செய்வதற்கு மாத்திரம் சம்பூரணமான ஒரு காலத்தை எதிர்பார்த்து வாழ்கின்றீர்களா? அப்படி ஒரு காலம் வரப்போவதில்லை. தானதர்மங்களை செய்தவற்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களே. பெரிதாக அல்ல உங்களிடம் இருக்கின்ற அளவின்படி சிறிதாகவே ஆரம்பியுங்கள். வறியோரின் வாழ்வில் விதைக்கப்படும் சிறிய விதைகள் அவர்களுடைய வாழ்வில் பெரிதான பலனை கொண்டு வரும். கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களு க்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. தேவனுடைய கிருபையானது எதிர்காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அவை நமக்கு ஒவ்வொரு காலைதோறும் புதியதாக இருக்கின்றது. எனவே, தாம த்திக்காமல், இன்றே ஆரம்பியுங்கள். உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

காலை தோறும் புதிய கிருபையை எனக்கு தரும் தேவனே, சமநிலைப் பிரமாணத்தின்படியே, என்னிடமிருப்பதிலிருந்து பகிர்ந்து கொடுக்கும் செய்கையை என்னில் விருத்தியடைச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 11:24-25