புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2023)

கருணைக்கண்ணன்

நீதிமொழிகள் 22:9

கருணைக்கண்ணன் ஆசீர்வ திக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.


ஒரு ஊரில், குறிப்பிட்ட தெருவொன்றிலே பலதரப் பட்ட பொருளாதார பின்ணனியுடைய மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். சிலர் நல்ல வசதி யுடன் இடாம்பீகரமான மாடி வீட்டிலே வசித்து வந்தார்கள். வேறு சிலர் தங்கள் மாதாந்த ஊதியத்திலும், இன்னும் சிலர் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்கள். அந்த ஊரிலே, ஒரு ஏழை யானவன், தங்கள் பசியை ஆற்றுவதற்காக வீடுதோறும் சென்று பிச்சை கேட்பதுண்டு. அந்த ஏழையான வன், குறிப்பிட்ட அந்த தெரு வழியாக வரும் போது, வசதியுடன் வாழ்பவ ர்களில் சிலரின், சுற்று மதில்களும், வெளி வாயில் கதவும் மிகவும் உய ரமாகவும், பார்வைக்கு அழகாகவும் காணப்பட்டது. ஆனால், அந்த ஏழை யானவன் வாயில் கதவை தட்டும் போது, வீட்டில் இருக்கும் நாய்கள் குரைத்து அவனை விரட்டி விடும். ஒரு ஆனால் அவனோ, அந்தத் தெருவிலே எளிமையான வாழ்க்கை வாழும் ஒரு குடும்பத்தினருடைய வீட்டிற்கு எந்தத் தயக்கமுமின்றி சாதா ரணமாக சென்று வருவது வழக்கமாக இருந்தது. அந்த எளிமையான குடும்பத்தினர் வீட்டில இருந்த நாயும் கூடவே அந்த ஏழையாவனை அறிந்திருந்தது. அந்த குடும்பதினர் தனக்கு எப்படியும் உணவு கொடு ப்பார்கள் என்ற நிச்சயம் அவனிடமிருந்தது. பிரியமானவர்களே, உலக த்தின் பார்வைக்கு அழகாக தோன்றும் வாழ்க்கை உண்டு. பொதுவாக அங்கே வாழ்பவர்களிடத்தில் செல்வச் செழிப்பும், சுயநலத்தில் ஐசுவரி மும் இருக்கும். ஏழை எளியவர்கள் அவர்களுடைய வாசற்படியில் வரு வதோ, அவர்களுடைய நண்பர்கள் மத்தியிலே அவர்களுக்கு மிகவும் கனவீனமாக இருக்கும். அழகாய் தோன்றும் வாசற் கதவிலே கந்தை துணிகளுடனான ஒரு ஏழை நிற் பதானது அவர்களுடைய தராதரதிற்கு ஏற்புடையதல்ல என மனிதர்கள் தங்கள் கிரியைகளைக் குறித்து கார ணங்களை சொல்லி, தங்கள் தீர்மானங்களை நியாயப்படுத்திக் கொள் கின்றார்கள். தானதர்மங்கள் அவனவனுடைய சொந்த விருப்பமாக இரு க்கின்றது. கருணைக்கண்ணன் இந்த உலகிலே எளிமையானவன் என்று கருதப்பட்டாலும், அவன் கர்த்தரால் ஆசீர்வதிக் கப்படுவான்;. அவன் தன்னிடத்தில் மிகையாக இப்பதில் மட்டுமல்ல, அவன் தன்னிடமிருக்கும் ஆகாரத்திலும் தரித்திரனுக்குக் தயாள உள்ளத்தோடு கொடுக்கிறான். சகோதரரே, கருணை உள்ளம் கொண்டவர்களாக இருங்கள். உங்க ளிடம் இருப்பதில் ஏழை எளியவர்களுக்கு கொடுங்கள். இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராக எப்போதும் இருங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள பரலோக தந்தையே, நான் எந்த நிலைமையில் இருந்தாலும், உம்மைப் போல இரக்கத்தை காண்பிக்கு ம்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:15-16