புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2023)

நீதிமான்கள் அசைக்கப்படுவதில்லை

நீதிமொழிகள் 11:28

தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்.


மிகையான ஐசுவரியத்தை பெற்ற ஒரு ஐசுவரியவானொருவன், தேவன் தன்னோடு இருக்கின்றார் என்றும், அவர் தன்னை ஆசீர்வதித் திருக் கின்றார் என்றும் மிகவும் மேன்மைபாராட்டிக் கொண்டான். ஒரு நாள், அவன் அடுத்த ஊருக்கு செல்லும் வழியிலே, தெருவிலே தன் இரண்டு பிள் ளைகளோடு, பசியாய் வாடும் ஒரு ஏழை விதவையைக் கண்டான். ஆனால், அவனோ தன் முகத்தை மற்ற பக்கமாய் திருப்பிப் கொண்டு, தன் அலுவலாக போய்விட்டான். ஏழை களின் பெலனும், எளியோரின் நம்பி க்கையுமான தேவனாகிய கர்த்தர் அந்த மனிதனைப் போன்றவர்களோடு எப்படி இருப்பார்? தரித்திரனுக்குத் தயைசெய்கிறவன் தேவனை கனம்பண்ணுகிறான். ஆனால் அந்த ஐசுவரியவானுக்கு பல சந்தததிக்கு வேண்டிய செல்வம் இருந்த போதும், இன்று பசியோடு வாடிடும் ஏழை களுக்கு இரங்க அவனுக்கோ மனதில்லை. ஆனால் தேவனுடைய நீதி மானோ, வாரியிறைக்கின்றான், இரக்கமுள்ள வனாய் தன்னிடத்திலுள் ளதை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்கின்றான். நீதிமான் தன் இருப்பில் நம்பிக்கை வைக்காமல், தன்னை படைத்த தேவனை நம்பி நன்மை செய்கின்றான். ஐசுவரியவானொருவன் தன் பிள்ளைகளுக்கென திராளான ஐசுவரியத்தை விட்டுச் சென்றான். அவனிற்கு பின் அவனுடைய பிள்ளைகளும் ஏறத்தாழ உலகத்தினால் உண்டான யாவற்றையும் அவர் களுக்குண்டான உலக ஐசுவரியத்தினால் பெற்றுக் கொண்டார்கள். உலகத்திலே வாழும்வரை வசதியாகவும், உல்லாசமாகவும், வேண்டி யதை செய்து வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்பவர்களின் மனக் கண் கள் குருடுபட்டு போவதால், தங்கள் வாழ்நாட்கள் புல்லின் பூவைப் போல காய்ந்து போகும் நாட்கள் சீக்கிரமாய் வருகின்றதென்பதை உண ராமலும், மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதைக் குறித்த அறி வற்றவர்களாகவும் வாழ்கின்றார்கள். உலகிலே வாழும் ஐசுவரிய வான்கள் யாவருமே அநீதியான வழியிலே வாழ்கின்றார்கள் என்று நாம் கூற முடியாது. ஆனால் ஒருவன் தன் ஐசுவரி யத்தை நம்பி வாழ்ப வனாயிருந்தால் அவன் அதனால் உண்டாகும் சோதனையிலும் கண் ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுந்து போவான். (நீதி 11:28, 1 தீமோ 6:9). சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த் தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. ஐசுவரி யத்தை அல்ல தேவனையே நம்பி வாழுங்கள்.

ஜெபம்:

ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனுமாயிருக்க தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உம்மை பற்றி வாழ்கின்ற நீதிமானாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 25:4