புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2023)

உலகம் தரும் மேன்மைகள்

1 யோவான் 2:25

நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வைத்தியரானவர் சன்மார்க்கனும், கல்விமானும் மக்கள் மத்தியிலே மிகவும் கனம் பெற்றவருமாக இருந்தார். சமுக அந்தஸ்து யாவும் நிறைவாக பெற்றிருந்த அந்த வைத்தியரானவர், தேச மட்டத்திலும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். ஆண்டுகள் கடந்து சென்ற பின், தேசத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக, அவர் தாமே அறியாத வேறோரு தேசமொன்றிற்கு சென்று தஞ்சம் அடைய வேண்டியதாயிற்று. ஆனால் அவர் சென்ற அந்த தேசத்திலே, இவர் பேசும் மொழி, கல்வி, பதவி, சமுக அந்தஸ்து ஏதும் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. தஞ்சம் புகுந்த அந்த தேசத்தின் தயவொன்றே அவருக்கு உதவியாக இருந்தது. பிரியமானவர்களே, நாம் யாவரும் நாம் வாழ்கின்ற நம் தேசங்களை விட்டு ஒருநாள் கடந்து செல்ல வேண்டும். இந்த பூமியிலே வாழும் நாட்களிலே, மனிதர்கள் தங் கள் வாழ்க்கையில் தாங்கள் அடைந்த மேன்மைகளைக் குறித்து பேசிக் கொள்வா ர்கள். 'நான் இந்த பல்கலைகழகத்திலே படித்தேன், இவ்வாறாக அதிக படியாக புள்ளிகளை பெற்று, அதிவிசேஷ சித்தி பெற்று, பட்டம் பெற்றேன். நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன். நான் இன்னாருடைய உறவினர்' என்று மனிதர்கள் தங்கள் தகமைகளை கூறும் போது செல்லும் இடமெல்லாம் கனத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். அவையெல்லாம் முடிவுக்கு வரும் நாட்கள் உண்டு. புல்லின் பூவுக்கு ஒத்திருக்கும் மனிதனுடைய நாட்கள் சீக்கிரமாய் முடிந்து போய் விடும். நதியின் அக்கரைக்கு அவன் செல்லும் போது அவன் எதைக் குறித்து பெருமை பாராட்ட முடியும்? உலக கல்வி, செல்வம், செல்வாக்குகள் யாவும் அங்கே செல்லுபடியாகாது. மனிதனானவன் தன் உற்றார், உறவினர், முற்பிதாக்களின் பெயர்களை கூறி அவன் அங்கே அங்கீகாரம் பெற முடியாது. கர்த்தருடைய கிருபையானது, அவருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கின்ற மனுஷன்மேல் தங்கியிருக்கும். தேவ கிருபையை பெற்ற மனுஷனைப் பற்றி இந்த உல கமானது எப்படியும் பேசிக் கொள்ளலாம். அப்படி பேசும் வார்த்தைகளுக்கும் ஒரு முடிவு வரும் நாள் உண்டு. ஆனால் வானமும் பூமியும் அதிலுள்ள யாவும் ஒழிந்து போனாலும், கர்த்தரின் வார்த்தையோ என்றென்றும் மாறாதது. அழியாத ஜீவனுள்ள அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் நித்திய ஜீவனை சுதந்திர மாய் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

ஜெபம்:

என்றென்றைக்கும் உண்மையைக் காக்கின்ற தேவனே, இந்த உல கத்தினால் உண்டாகும் மேன்மைகளினால் என் மனக் கண்கள் இருள டைந்து போய்விடாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:28