புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2023)

வாழ்க்கையிலே என்னத்தை சாதித்தோம்?

சங்கீதம் 73:24

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.


எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சல முமே. அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று தேவனுடைய தாசனாகிய மோசே கூறியிருக்கின்றார். பொதுவாக எல்லா மனிதர்களும் ; தாங்கள் கடந்து வந்த பாதையையும், வாழ்க்கையின் அனுபவங்களை யும் திரும்பிப் பார்ப்பதுண்டு. சிலர் வாழ்க்கையிலே என்னத்தை கண்டோம் என்று சொல்லிக் கொள் வார்கள். வேறு சிலர், நாங்கள் அநேக காரியங்களை சாதித்தோம் என்று மேன்மை பாராட்டிக் கொள்வார் கள். இன்றும் கூட பலர், வந்தோம், வாழ்ந்தோம், போனோம் என்று தங்கள் நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியாக ஒரு சந்ததி போகின்றது, மறு சந்ததி வருகி ன்றது. வாழ்க்கையென்பது அவ்வளவும்தானா? சற்று சிந்தித்துப் பாருங்கள்! இந்தப் பூமிமையையும் அதிலுள்ளவைகளிலும் மட்டும் நம் பிக்கை வைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை இந்த அநித்தியமான பூமியோடு முடிந்து போகின்றது. மனிதர்கள் எப்படியாக சிந்தித்தாலும், இப்பொழுது இருக்கின்ற வானங்களும் பூமியும் தேவனுடைய வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியி ல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது அப்படியானால் சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயா சத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? இந்த பூமியிலே மனிதர்களுடைய மனம் ஒரு போதும் திருப்தியாவதில்லை. காண்கிறதினால் கண்திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிர ப்பப்படுகிறதுமில்லை. ஆனால், தேவனாகிய கர்த்தரை சார்ந்து அவரு டைய வழியிலே நடக்கின்ற மனுஷனுடைய ஆத்துமா கர்த்தருக்குள் திருப்தியாகும்;. அவனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவன் தன் வாழ்க்கையில் தேவ சித்தம் நிறைவேற இடம் கொடுப்பதால், அவனுடைய வழியின்மேல் தேவனானவர் பிரியமாயிருக்கிறார். நாமும்; இந்த உலகத்திலே எதையும் சாதிக்கும்படியாக வாழ்வதில்லை. பிதாவா கிய தேவ னுடைய சித்தம் நம்; வாழ்விலே நிறைவேற நாம்; இடங் கொடுக்க வேண்டும். அப்படி தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நாம் நடக்கும் போது, பரலோகத்தின் தேவனாகிய அவர்தாமே நமக்கு அழி வில்லாத மகிமையின் கிரீடத்தை கொடுப்பார்.

ஜெபம்:

என் வலதுகையைப் பிடித்துத் என்னை தாங்கும் தேவனே, நான் காரியம் அறியாத மூடனாக இந்த உலகத்தின் போக்கிலே வாழாமல், எப் பொழுதும் உம்மோடிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:25