தியானம் (தை 14, 2023)
நாம் சோர்ந்து போவதில்லை
2 கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை
ஆதி சபையிலிருந்தவர்கள் யூதமார்க்கத்தின் மதத் தலைவர்களாலும், ரோம சக்கரவத்தியினாலும் துன்புறுத்தப்பட்டார்கள். மேலும், வீடுகள்தோ றும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனா லும், சிதறிப்போனவர்களோ எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிர சங்கித்தார்கள். (அப்போஸ்தலர் 8:4, 11:19). ரோம அதிகாரிகள், கிறி ஸ்தவர்களை சிறைக்கைதிளாக்கி, அவர்களுடைய சட்ட முறைமைகளி ன்படி கிறிஸ்தவர்கள் ரோமருடைய வழி பாட்டு முறைமைகளுக்கு இண ங்காதபடியால், கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தினார்கள். சிலரை சிலுவையிலே அறைந்து, அவர் களைக் கம்பங்களிலே கட்டி வெளிச்சம் கொடுக்கும்படி அவர்கள்மேல் நெருப்பை கொளுத்தி, உடல்களை பற்றியெரியவைத்தார்கள். வேறு சிலர் சிங்கங்க ளுக்கு இரையாக கொடுக்கப்பட்டார்கள். இவை யாவும் ரோமர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அவர்கள் கிறிஸ்தவர்களின் கொடூரமான மரணத்தை கண்டு களிக்க அரங்குகளிலே கூடி வந்திரு ந்தார்கள். இவைகளை நாம் சரித்திரத்தன் வாயிலாக அறிந்திருக்கி ன்றோம். இப்படிப்பட்ட உபத்திரவங்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் தங் கள் விசுவாசத்தை சற்றேனும் இழந்து போகவில்லை. தேவனுக்கெ திரான வார்த்தைகளைப் பேசவுமில்லை. உபத்திரவங்கள் மத்தியிலும், மரண பரியந்தம் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருந் தார்கள். ரோம அதிகாரிகளுக்கும், அன்றிருந்த ஜனங்களுக்கும் அவர் கள் வேடிக்கையாகவும், பரியாச சின்னமாவும் எண்ணப்பட்டார்கள். ஆனா லும் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ இவையொன்றும் அவர்களை, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு பிரிக்க முடி யவில்லை. கிறிஸ்துவின் இரத்த சாட்சிகளாக அவர்கள் மரித்தார் கள். அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டவர்கள் யாவ ரும், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருபபார்கள். எனவே உங்களுக்கு உண்டாகும் தற்காலத்து பாடுகளை குறித்து சோர்ந்து போய்விடாதிருங்கள். நம்முடைய பாடுகள், ஆதி கிறிஸ்தவர்களின் பாடு களுக்கு ஒப்பானது அல்ல. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காண ப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகி மையை உண்டாக்குகிறது. எனவே சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை நடப்பியுங்கள். அழியாமையை தரிக்கும் காலம் சமீபித்திருக்கின்றது.
ஜெபம்:
ஈடு இணையில்வாத மகிமைக்குள் நம்மை சேர்க்கின்ற தேவனே, இவ்வுலக பாடுகளால் சோர்ந்து போகாமல், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படும்படி என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 11:33-38