தியானம் (தை 13, 2023)
சிலுவையின் ஜெபம்
லூக்கா 23:34
பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்ன தென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
ரோமருடைய ராஜ்யத்திலே, சிலுவையில் அறையப்படுவதென்பது மிகவும் வெட்கக்கேடானதும், கோரமானதுமான மரண தண்டனையுமாக இருந்தது. ரோமர்கள் பொதுவாக தங்களது சொந்த குடிமக்களை சிலுவையில் அறைவதில்லை. சிலுவை மரணமானது, அடிமைகள், துரோகிகளான வீரர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற புறஜாதியினருக்கு உரியதொன்றாகவே இருந்து வந்தது. இப்படிப்பட்ட கொடூர மானதும், அவமானமும் நிந் தையும் நிறைந்த மரணத்தை அடையும்படி, எந்தக் குற்ற மும் செய்யாத நம்முடைய மீடபராகிய இயேசுவை சிலு வையிலே அறைந்தார்கள். இதினிமித்தம் மனித குலம் அடைய வேண் டிய நித்தியமான நரக ஆக்கினையை அவர் தன்மேல் சுமந்து, பாதாள த்தின் வல்லடிக்கு நம் ஆத்துமாக்களை விலக்கிக் காத்தார். இப்படிப் பட்ட மரணத்திற்கு பாத்திரராக இருந்த இரண்டு கள்வர்கள் பரிசுத்தரா கிய இயேசுவின் வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்ப ட்டார்கள். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரை பரி யாசம்பண்ணினார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இக ழ்ந்தார்கள். போர்ச்சேவகர்களும் அவரைப் பரியாசம்பண்ணினா ர்கள். அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனும் அவரை இகழ்ந்தான். இப்படிப்பட்ட வேதனையான சூழ்நி லையிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு, பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று ஜெபம் செய்தார். ஆனால் சில வேளைகளிலே தேவ பிள்ளைகளு டைய வாழ்க்கையிலே மிகவும் சிறிதானதும், அற்பமானதுமான அசௌ கரியங்கள் ஏற்படும் போது, அதை சகித்துக் கொள்ளக் கூடாமல், அந்த அசௌகரியங்கள் எவரால் ஏற்பட்டதோ, அவர்களுடைய பூர்வீகங்;க ளைக் குறித்து விமர்சித்து, ஆண்டவர் இயேசு மன்னித்து மறந்து போன அவர்களுடைய பழைய பாவங்ளைப்பற்றி பேசி, அவர் களை சபித்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, இது கிறிஸ்துவின் வாசனையல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் ஜெபத்தை நாம் மனதார செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவையே தரி த்திருக்கும் நாம், சாபமான வார்த்தைகளை அறிக்கை பண்ணாமலும், நம் துன்பத்தின் மத்தியிலும் மற்றவர்களை ஆசீர்வதிக்கி ன்றவர்களாக மாற வேண்டும்.
ஜெபம்:
பாதாள வல்லடிக்கு என் ஆத்துமாவை விலக்கி காத்த தேவனே, கண்ணீர் பாதையிலே நான் நடக்கும் போதும், உம்முடைய வார்த்தைகளை மறந்து விடாமல் இருக்க என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 6:35