புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2023)

வெற்றியின் நறுமணம்

2 கொரிந்தியர் 2:14

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.


ரோமரின் ஆட்சிக் காலத்திலே, யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும்படிக்கு, வெற்றிக்கான ஊர்வலமானத ஏற்பாடு செய்யப்ப டும். இந்த யுத்த வீரர்கள், தாங்கள் அடைந்த வெற்றியின் மூலமாக, தங்கள் ராஜ்யத்திற்கும் அதன் ராஜாவாகிய செசாருக்கும் பெரும் கனத் தையும் மகிமையையும் உண்டாககும்படி செய்தார்கள். குறிப்பிடப்பட்ட அந்த வெற்றியின் ஊர்வலத்திலோவென்றால், நறுமணம் வீசும் தூப ங்களை காட்டுவார்கள். ஊர் வலம் செல்லும் அரங்கிலே வீசும் அந்த நறுமணத்தை வெற்றியின் வாசனை என்று வெற்றி பெற்ற வீரர்களும், அதிகாரிகளும், ஜனங்களும் நுகர்ந்து மகிழ்கிழ்வார்கள்.; ரோம ராஜ்யமோ நிலைய ற்று அழிந்து போய்விட்டது, ஆனால் நமக்கு ஒரு அழி யாத நித் திய ராஜ்யம் உண்டு, அதன் சேனைத் தலைவராகிய ஆண்டவர் இயேசு ராஜாதி ராஜாவாக என்றென்றும் இருக்கின்றார். நாமோ அவரு டைய ராஜ்யத்தின் சேனையின் போர் வீரர்களாக இருக்கின்றோம். இந்த உலகத்திலே வாழும் நாட்களிலே, நாம் பற்பல சூழ்நிலைகளை சந்தி க்கின்றோம். இந்த உலகிலே நாம் வாழும் நாட்களிலே, நம்முடைய ராஜாதி ராஜாவாகிய இயேசுவின் நாமத்தில், பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்ற பாதையிலே, நமக்கு, பாராட்டல்களும், வெற்றியின் கரகோசங்களும் ஒலிக்கும் நேரங்களும் உண்டு. துன்பங்க ளையும், உபத்திரவங்களையும், பாடுகளையும் அடையும் நாட்களும் உண்டு. அவமானமும், நிந்தையுமுhன பேச்சுக்களை கேட்கும் நேரங்க ளும் நமக்கு ஏற்படுவதுண்டு. அதாவது, சில வேளைகளிலே நாம் இந்த உலகத்திலுள்ளவர்களுக்கு வெற்றி பெற்றவர்கள் போல தோன்றலாம் ஆனால் வேறு சில நேரங்களிலே இந்த உலகத்திற்கு நாம் பைத்திய க்காரர்களை;ப் போலவும், தோல்வி அடைந்தவ ர்கள் போலவும் தென் படலாம். இவை எல்லாவற்றிலும் நாம் தேவனு டைய சித்தத்தை நிறைN வற்றும் போது, நாம் நம்முடைய தேவனுக்குக் கிறிஸ்து வின் நற்கந்த மாயிருக்கிறோம். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய வாழவில் வரும் எல்லா சூழ்நிலைகளிலும், தேவனுக்கு பரிசுத்தமும் பிரியமுமான ஜீவ பலியாக நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். சில வேளைகளிலே அவை இந்த உலகத் திற்கு ஏற்புடையதாக இருக்கா விட்டாலும், தேவ னுக்கு சித்தமானது எதுவோ நாம் அதையே நடப்பிக்க வேண்டும் தேவனுக்கு சித்தமானால் நாமும் கிறிஸ்துவைப் போல நன்மை செய்து பாடநுபவிக்கின்றர்களாக வாழவேண்டும்.

ஜெபம்:

என் பிதாவாகிய தேவனே, நான் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகாமல், கிறிஸ்துவின் சுபாவங்களை வெளிக்காட்டும் நற்கந் தமாக, சுகந்த வாசனையாக இருக்க என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:8-10