தியானம் (தை 10, 2023)
சுகந்த வாசனை
ஆதியாகமம் 8:21
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்.
பெரும் ஜலப்பிரவாகத்தின் பின்பு, நோவாவிற்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. கர்த்தருடைய கட்டளையின்படி, நோவா, அவன் தன் மனைவியும், குமாரர்கள் மற்றும் குமாரர்களின் மனைவிகளோடு பேழையை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரி ந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளா கப் பலியிட்டான். சுகந்த வாசனை யைக் கர்த்தர் முகர்ந்தார். பிரியமா னவர்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தர் வெறும் பலிகளிலே பிரியப்படுகின்றவர் அல்ல. (ஏசாயா 1:11, ஏரேமியா 6:20, எபிரெயர் 10:6). அவை திரளானவைகளாகவோ, அதி உச்சிதமானவைகளாகவோ இருக்கலாம் ஆனால் பலியை செலுத்துபவனின் இருதயமானது தேவ னுக்கு ஏற்புடையதாக இருக்காவிடின் அந்தப் பலிகள் கர்த்தருக்கு பிரியமாயிராது. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு அதற்கு மனதார கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்கள் ஏறெடு க்கும் பலிகளோ அவருக்கு சுகந்த வாசனையாக இருக்கும். தேவனு டைய பக்தனாகிய நோவா, தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனும், நீதியைப் பிரசங்கித்து, அவன் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டுமிருந்தான் (ஆதி 6:9, 2 பேதுரு 2:5) கர்த்த ருக்கு பிரியமான இருதயத்தோடு, சுத்தமான பலிகளை தேவனா கிய கர்த்த ருக்கு அவன் ஏறெடுத்தான். கர்த்தர் அதில் பிரியமாயிருந்தார். வரப்போ கின்ற நிலையான நகரத்தை நாடித் தேடுகின்ற நாம், தேவனுக்கு பிரியமான அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை மீட்பராகிய இயேசு வழியாக எப்போதும் தேவனு க்குச் செலுத்தக்கடவோம். ஒருவேளை நீங்கள் மாளிகையிலே வாழ்ந்து வரலாம் அல்லது எளிமையான குடிசையிலே வாழ்ந்து வரலாம். உலகத்தின் அளவுகோலின்படி நாம் உயர்ந்தவர்களாகவோ அல்லது தாழ்ந்தவர்களாகவோ இருக்கலாம். மனிதர்கள் மத்தியிலே அறியப்பட்ட வர்களாகவோ, அறியப்படதாவர்ளாகவோ இருக்கலாம். ஆனால், கர்த்த ருடைய சத்தத்தைக் கேட்டு அதற்கு மனதார கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்களுடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி கர்த்தருக்கு சுகந்த வாசனையாக இருக்கும். எனவே, கர்த்தருக்கு பிரியமான பலிகளை நாம் செலுத்தக் கடவோம்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனாகிய கர்த்தாவே, உலகத்தினால் இழுப்புண்டு போகாமல், நான் உமக்கு பிரியமான பலிகளையே செலுத்தும்படிக்கு நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 சாமு 15:22