புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2023)

தேவனுக்கேற்ற இருதயம்

சங்கீதம் 51:17

தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதய த்தை நீர் புறக்கணியீர்.


வேதத்திலே காணும் சில பாத்திரங்களின் இருதயங்களை இன்று ஆரா ய்ந்து பார்ப்போம். இவர்கள் யாவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலே, தேவனுடைய வார்த்தையை மீறி பாவம் செய்தார்களே. அந்த வேளை யிலே அவர்களுடைய மீறுதல்கள் அவர்களுடைய இருதயங்களிலே அவரவர்களுக்கு உணர்த்தப்பட்டது. உணர்த்தப்பட்ட வேளையிலே அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சற்று கருத்தில் கொள்வோம். 1. சவுல் ராஜா என்பவர் தேவ னால் அபிஷேகம் பண்ணப்பட் டவர், ஆனால் அவரோ தேவன் சொன்ன வார்த்தையை நிறைவே ற்றாமல், மீறி நடந்தார். தீர்க்கத ரிசியாகிய சாமுவேல் அதை அவ ருக்கு வெளிப்படுத்தின போது, சவுல் ராஜா, தன்னைத் தாழ்த்தாமல் தன் இருதயத்தை கடினப்படுத்தி, தன் குற்றத்தை நியாயப்படுத்த முயன்றார். மனந்திரும்;ப காலம் தாழ் த்தினான். இது குணப்படாத இருதயம். அதன் முடிவு அழிவு. (1 சாமு 13:8-14, 15:21-23) 2. தாவீது ராஜா, தேவனுக்கு விரோதமாக பெரும் பாதகத்தை செய்தார். நாத்தான்வேல் என்னும் தீர்க்கதரிசி அதை அவருக்கு வெளிப்படுத்திய போது, நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று தன்னை உடனடியாக தாழ்;த்தி மனம் வரு ந்தினர். (2 சாமு 12:13) இது தேவனு க்கு ஏற்ற இருதயம். 3. ஆண்டவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸ், கர்த்தரை காட்டிக் கொடு த்தான். அப்பொழுது, கர்த்தர் அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினா லேயா மனுஷகுமாரனைக் காட் டிக்கொடுக்கிறாய் என்றார அவன் சில ஆண்டுகளாக கர்த்தரோடு இருந்தும், அவன் தன் இருதயத்திலே கள்வ னாகவே இருந்தான். (யோவான் 12:6) அவன் மனந்திரும்பதவனாய் தன்னைத் தான் மாய் த்துக் கொண்டான். இது குணப்படாத இருதயம். (லூக்கா 22:48) 4. ஆண்டவர் இயேசுவின் பிரதான சீஷனாகிய பேதுரு கர்த்தரை தனக்கு தெரியாது என்று மூன்று முறை பலர் முன்னிலை யிலே மறுதலித்தான். ஆனால், கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்த போது, அவன் வெளியே போய், மனங்கசந்து அழுதான். இது தேவனுக்கு ஏற்ற இருதயம். பிரியமானவர்களே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை தேவன் ஒருபோது புறக்கணியார். எனவே, இந்த ஆண்டிலே வாழ்க்கை யிலே தவறுகள் ஏற்படும் போது, தாமதிக்காமல், மனம்திரும்பி தேவனண்டையிலே சேர்ந்து கொள்ளு ங்கள்.

ஜெபம்:

உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகின்ற தேவனே, என் மீறுதல்களிலே நீடித்து நிலைத்திருக்காமல், தாமதமின்றி உம்மிடம் திரும்பும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:19