புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2023)

இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்

சங்கீதம் 95:8

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டின போதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.


ஒரு பாடசாலையிலே சில மாணவர்களுக்கிடையிலே ஏற்பட்ட விவாதம் பெரும் குழப்பமாக மாறிவிட்டதால், பாடசாலையின் அதிபர், சம்மந்த ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வந்து தன்னை சந்திக்கும்படிக்கு செய்தி அனுப்பினார். இப்படியாக செய்தியை பெற்ற ஒரு குறிப்பிட்ட மாணவனின் பெற்றோர், தங்கள் மகனானவனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அவன் செய்த குற்றத்தை நியாயப்படுத்தும் வழி களை தேடினார்கள். மதிய வேளை யிலிருந்து இரவு வரை அவர்கள் தங்கள் குடும்பத்தாருடனும், சில நண்பர்களுடனும். கலந்தாலோசி த்து, எப்படியாக தங்கள் மகனா னவனுக்கு ஆதரவான சாட்சிகளை ஏற்படுத்தலாம் என்று திட்டம் போட் டுக் கொண்டிருந்தார்கள். இந்த சம் பவத்தை அவதானித்துக் கொண் டிருந்த அந்த மாணவனின் பாட்ட னார், அவர்களை நோக்கி: எப்படி யாக எதிர்த்து பிரதிவாதம் செய்வது என்பதைக் குறித்து கடந்த 10 மணித்தியாலங்களாகப் பேசிக் கொண் டிருக்கின்றீர்களே, செய்த குற்றத்தை ஏற்று, சம்பமந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது மிகவும் இலகுவானதும், அது உங்களுக்கும், உங் கள் மகனானவனின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, பெற்றோரின் பாசம் பெரியது என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால், செய்த குற்றத்தை மூடிமறைக்க யுக்திகளை தேடி, ஒருவேளை இந்த குற்றத்தை நியாயப்படுத்தி தற்கா லிகமானதொரு வெற்றியைக் காணலாம் ஆனால் அவர்கள் தங்கள் மகனானவனிற்கு எதை கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்? அப்படிப்பட்ட செய்கையானது, அந்த மகனானவனில் குண ப்படாத கடினமான இருதயத்தை உருவாக்கும். பிரியமான வர்களே, இந்தத் தியானமானது உங்கள் பிள்ளைகளைப் பற்றியதல்ல, மாறாக தேவ பிள்ளைகளாகிய நம்மைப் பற்றியதே. சில வேளைகளிலே, குடும் பத்தில், உறவுகள் மத்தியில் சபைகளில் குழப்பங்கள் ஏற்படும் போது, சிலர், தங்கள் இருதயங்களை கடினப்படுத்தி, எதிர்வாதம் செய்வதற் காக அநேக நாட்களை விரயப்படுத்தி ஆயத்தப்படுகின்றார்கள். ஆனால் நாமோ, சோதனையின் நாளிலே, கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோமாக. அப்பொழுது அவர் நம்மோடு இருப்பார்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் குணப்படும்படி என்னை ஏவுகின்ற உம்முடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணாதபடி இருக்க நீர் என்னை உணர்வுள்ளளாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:4-6