புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2023)

ஒப்புக் கொடுத்தல்

சங்கீதம் 112:1

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


என்னுடைய பிள்ளைகள் சபை ஐக்கியத்திற்கு வருவார்கள் எப்படியாவது அவர்களை நல்வழிப்படுத்தி விடுங்கள் என்று அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர், சபைப் போதகரொருவரிடம் கூறினார்கள். போத கர் மறுமொழியாக: உங்கள் பிள்ளைகள் சபை ஐக்கியத்திற்கு வருவது வரவேற்கத்தக்கது. உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று பெற்றோரிடம் கேட்டார். நாங்கள் நன்றாகத் தான் இருக்கின்றோம். நீங்கள் பிள் ளைகளை நெறிப்படுத்தினால் போதும் என்று அந்தப் பெற்றோர் மறு மொழி கூறினார்கள். அதற்கு போதகரானவர் மறுமொழியாக: நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஒப்புக் கொடுக்க முன்பதாக, முதலா வதாக, நீங்கள் உங்கள் இருதயங் களை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்கும் போது, அவர் உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். முன்னைய நாட்களிலே, தேவனுடைய ஜனங்கள், தேவன் அவர்களுக்கென்று கொடுத்த வேதத்தை மறந்து போனதினிமித்தம் தேவனானவர் தம்முடைய தீர்க்கதரிசி வழியாக அவர் களுக்கு கூறிய வார்த்தையானது என்னவென்றால்: என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்;. நீ அறிவை வெறுத்தாய், ஆகை யால் நீ என் ஆசாரியனா யிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன் என்று நமது தேவன் பிதாக்க ளோடு பேசிக காரியங்களை, அந்தப் பெற்றோருக்கு எடுத்துக் கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய நாட்களிலும் சில தேவபிள்ளைகள், தங்கள் வீட்டை, சமுகத்தை, பட்டணத்தை, தேசத்தை, ஏன் உலகம் முழுவதையும் தேவனுக்கென்று ஒப்புக்கொடுக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். சில வேளைகளிலே அவைகளுக்காக உபவாசித்து ஜெபிக்கவும் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், தேவனுடைய வசனம் என்ன கூறுகின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடாமல், தேவனுடைய வார்த்தை கருத்தில் கொண் டவர்களாக வாழ வேண்டும். முதலாவதாக, நாம் தேவ சமுகத்திலே நம்மைத் தாழ்த்தி, நாம் முழுமையாக தேவனிடம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது நாம் தேவனுடைய நன்மையான வாக் குத்தத்தங்களை பூரணமாய் பெற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

நிலையற்ற வாழ்க்கையிலே நிம்மதியை தரும் தேவனே, நித்திய ஜீவனைத் தரும் உம்முடைய வேதத்தை நான் மறவாமல், அதை இறுகப்பற்றிக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஒசியா 4:6