புதிய நாளுக்குள்..

தியானம் (தை 05, 2023)

காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.


அடுத்த மாதத்திலே நான் ஒரு வியாபாரத்தை ஆரம்ப்பிக்கும்படி எண்ணியுள்ளேன், அதற்காக உங்களிடம் ஆலோசனையை பெற்றுக் கொள் ளும்படி வந்திருக்கின்றேன் என்று ஒரு மனிதனானவன் தன் போதகரிடம் கூறினான். அவன் இளம் வயதுள்ளவனாக இருந்தபோதிலும், தேவனு டைய ஆலோசனையை பெற் றக் கொள்ள வேண்டும் என்று அவன் மனதிலே இருக்கும் செம்மையான எண்ணத்தை அந்த போதகரானவர் பாரா ட்டி, அவனை நோக்கி: மகனே, முதலாவதாக, உன் வியாப ரத்தை அல்ல, உன் உள்ள த்தை கர்த்தரிடம் முழுமையாக ஒப்புக்கொடு. உன் வழிகள் எல்லாவற் றையும் ஆராய்ந்து பார்த்து, அவைகளிலே கர்த்தரை விட்டு வழுவிப் போகும் வழி ஏதாவது உண்டோ என்று ஆராய்ந்து பார்த்து அதை சீர்படுத்திக் கொள். வழுவிப்போகும் வழிகளை சீர்படுத் தாவிடில், வியாபர எழுச்சியினால் அல்லது வீழ்ச்சியினால் உண்டாகும் தாக்கம், உன் இருதயத்தை அந்த வழியினாலே கர்த்தரைவிட்டு வழுவிப் போகச செய்துவிடும் என்று ஆலோசனை கூறி போதகரானவர் அவனுக்காக ஜெபம் செய்தார். நித்திய வாழ்வுக்கென்று அழைப்பைப் பெற்ற மகனே, மகளே, உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கி யமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளை கள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர் வதிக்கப்படுவான். (சங்கீதம் 128:1-4). என்று வாக்குத்தத்தமானது கர்த்த ருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிற யாவருக்கும் கொடுக்கப்ப ட்டிருக்கின்றது. ஆனால், சில வேளைகளிலே மனிதர்கள் நேர்மையாய் வியாபாரம் செய்தால், அதி உத்தமானாக வாழ்ந்தால் இந்த உலகத் திலே பிழைத்துக் கொள்ள முடியாது என்று கர்த்தருடைய வழிகளை அலட்சியம் செய்கின்றார்கள். அதனால், ஒரு வேளை அற்பமான குறு கிய கால ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கர்த்தருடைய வழியை விட்டு செல்கின்றவனுடைய முடிவு அழிவாகவே இருக்கும். எனவே தேவனு டைய ஆசீவாத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, பரிசுத்த வேதா கமம் கூறும் சத்திய வார்த்தைகளின்படி நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, நம் வழிகளை கர்த்தரிடம் ஒப்புக் கொடுப்போம். அவர் நிச்சயமாக நம்முடைய காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என் சொந்த புத்தியின்மேல் சார்ந்து கொள்ளாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக்கண்களை எனக்கு தந்து உமக்கு பிரியமான நீதியின் வழியிலே நான் நடக்கும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-4