புதிய நாளுக்குள்..

தியானம் (தை 04, 2023)

இக்கட்டும் நெருக்கமுமான வேளைகளில்

1 சாமுவேல் 30:6

தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.


தாவீதும் அவனோடிருந்த அறுநூறு பேரும் சிக்லாக் என்னும் இடத் தில் சஞ்சரித்து வந்த நாட்களிலே, ஒரு சமயம் அவனும் அவனோ டிருந்த புருஷர்களும் இல்லா வேளையிலே, அமலேக்கியர் சிக்லாகின் மேல் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அவர்களுடைய மனைவிமார்களையும், குமாரர் குமாரத்தி களையும் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்தவர்க ளும், அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கி லேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லி க்கொண்டார்கள்;. அப்படிப்பட்ட துன்பமான வேளையிலும், தன் இஷ;ட ப்படி அமலேக்கியரை பின்தொடர்ந்து போகாமல், தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கர்த்தருடைய சித்த த்தை அறியும்படிக்கு, தாவீது கர்த்தரை நோக்கி: நான் அமலேக்கியரை பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு கர்த்தர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப் பிக்கொள்வாய் என்றார். அந்தப்படியே, தாவீது பின்தொடர்ந்து தன் னுடையவர்கள் யாவரை மீட்டுக் கொண்டான். மிகவும் இக்கட்டான அந்த வேளையிலே, அவன் யாரிடமும் எதைக் கேளாமலும், தேவனை நோக்கி வேண்டுதல் செய்யாமலும், அமலேக்கியரை பின்தொடர்ந்து செல்வதற்கு அவனுக்கு தடையேதும் இருக்கவில்லை. தன்னுடையவ ர்களை மீட்கும்படி அவன் போருக்கு செல்வதை நியாயமான செயல் என்று யாவரும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், அந்த நெருக் கடியான வேளையிலும், தேவனாகிய கர்த்தருடைய சித்தத்தை அறிய வும், அவர் தன்னோடுகூட இருப்பதையுமே தாவீது விரும்பினான். அது போல, நம்முடைய வாழ்விலே, துன்பமான சூழ்நிலைகள் ஏற்படுவது ண்டு. அவ்வேளைகளிலே பலர் நம்மை எதிர்த்து வரலாம். நிந்தையான வார்த்தைகளை கூறலாம். அந்த வேளையிலும், மனம் பதறி, நான் ஆராதித்து வந்த தேவன் எங்கே? என்று கேள்விகளை கேட்டு, மனம் விரும்பியதை செய்யாமல், கர்த்தருக்குள் நம்மை நாம் திடப்படுத்திக் கொண்டு, அவருடைய சித்தம் நம் வாழ்விலே நிறைவேற நாம் இடங் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இக்கட்டும் நெருக்கமும் என்னை சூழ்ந்து கொள்ளும் போது, நான் உம் வழியை விட்டு விலகாதபடிக்கு, என்னை பெலப்படுத்தி, திடப்படுத்தி காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங் 119:142-144