புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2023)

செய்யும் செயல்களிலே நிறைவு வேண்டுமா?

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;


உயர்தர வகுப்பிலே கல்வி கற்கும் மாணவனானவனொருவன், ஒரு முக்கியமான ஆண்டிறுதிப் பரீட்சையை எழுதுவதற்காக, நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தான். போகும் வழியிலே இருந்த ஆலயத்திற்குள் சென்று, தான் பரீட்சையிலே சித்தியடைய வேண்டும் என்று கர்த்தரிடத்திலே வேண்டுதல் செய்தான். தேவன் இரு க்கின்றார் என்றும், அவரிடத்தில் விசுவாசமுள்ளவனாகவும் இருந்த படியினாலே பரீட்சைக்கு செல்லும் முன்பாக அவன் அப்படியாக வேண் டுதல் செய்தான். இது ஒரு நன் மையான காரியம். அவன் தான் செய் யும் செயல்களை செம்மையாக செய்யும்படிக்கு, அவன் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். அவன் தன்னுடைய முக்கிய மான பரீட்சையை குறித்து, வருட ஆரம்பித்திலேயே அறிந்திருந் தான். எனவே, கொடுக்கப்பட்ட நாட்;களை தன் இஷ;டப்படி விரயப்படுத்திவி ட்டு, கடைசி நேரத்தில் தேவனை நோக்கி பார்ப்பதைவிட தன்னுடைய நாட் களையும் நேரங்களையும் தேவனுக்கு பிரியமுள்ள முறையிலே பிரஜோ னப்படுத்தி, பரீட்சைக்கு ஆயத்தமாவதற்குரிய காரியங்களை செய்து கொண்டு, பரீடசையின் நாளிலே தேவனை நோக்கிப் பார்ப்பதே சிறந்த வழிமுறையாகும். தேவனுடைய பார்வையிலே விலையேறப் பெற்ற அரு மையான சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டிலே, பிதாவாகிய தேவ னுடைய சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவதைக் குறித்த விஷ யத்திலே, கிறிஸ்துவுக்குள் நீதியின் வெளிச்சத்தில் இந்த ஆண்டிலே இன் னும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுங்கள். சில தேவ பிள்ளைகள், சில வேளைகளிலே, அறிந்தோ அறியாமலோ, வீட்டை தங்கள் இஷ;டப்படி கட் டிவிட்டு, திறப்பு விழாவிற்கு ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை தேடு கின்றார்கள். திருமண ஒப்பந்தங்களை, தங்கள் விருப்பப்பபடியும், முன் னோரின் பாரம்பரியத்தின் படியும் ஆயத்தம் செய்து விட்டு, திருமண விழா விலே தேவ ஆசீர்வாதத்தை தேடுகின்றார்கள். புதிய வியாபாரத்தை ஆரம்பிப்ப தற்கு, தங்கள் எண்ணப்படி திட்டங்களை போட்டுவிட்டு, இறு தியிலே, தேவன் அதை பலுகிபெருகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார் க்கின்றார்கள். நித்திய ஜீவனுக் கென்று அழைப்பைப் பெற்றவர்களே, ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னதாகவே தேவ சித்தத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களில் பெருகுவதாக. வேத வார் த்தைகளின்படி நாம் நம்முடைய திட்டங் களையும் செயல்களையும் தேவனிடம் ஒப்புக்கொடுத்து, உத்தம இருத யத்தோடு அவருடைய வழிநடத்துதலுக்கு காத்திருக்க பழகிக் கொள்வோமாக.

ஜெபம்:

உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று சொன்ன தேவனே, என் திட்டங்கள் யாவையும் உம்மிடத்தில் தருகின்றேன் நீ என்னை செம்மையான வழியிலே நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:31