தியானம் (தை 02, 2023)
புதுப்பித்தல்
ஏசாயா 43:19
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
இன்னுமொரு புதிய ஆண்டு! மனதிலே புத்துணர்ச்சி! வாழ்க்கையிலே புதிய ஆரம்பம்! என்றும் மாறாத புது கிருபை! இவை யாவும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய அனுக்கிரகம். வாழ்க்கையின் கணக்கை ஆராய்ந்து பார்ப்ப தற்கும், பின்னானவைகளை மற ந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந் தயப்பொருளுக்காக இல க்கை நோக்கித் தொடருவதை நிச்ச யித்துக் கொள்வதற்கும் இது ஒரு அருமையான சந்தர்ப்பம். அதன் பொருட்டு முந்தினவைகளை நினைப்பதையும், பூர்வமானவைகளைச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் விட்டுவிட வேண்டும். புதிய காரிய ங்களை விரும்பினால், பழைய இருதயத்தை விட்டுவிடுங்கள். சில மனிதர்கள் கடந்த ஆண்டில் பெற்ற வெற்றியை கொண்டாடுவதிலும், வேறு சில மனிதர்கள் அடைந்த தோல்விகளிலே அமுழந்து மனம்தொ ந்தபடியே இருப்பதிலும் நாட்களை விரயம் செய்கின்றார்கள். வெற் றியை கொண்டாடுவதில் தவறில்லை ஆனால், பாடசாலைக்கு செல்லும் உங்கள் பிள்ளைகளில் ஒருவன், நான் கடந்த ஆண்டிலே கணிதத்திலே அதி விசேஷட சித்தி பெற்றேன் என்று அதைப் பற்றியே பேசிக் கொண் டிருப்பானானால், அவன் இந்த ஆண்டில் கற்க வேண்டியவைகளை ஒழுங்காக கற்பதில் கவனம் செலுத்த மாட்டான். கடந்த ஆண்டிலே நாம் நம் வாழ்வில் பெற்ற நன்மைகள், கண்ட வெற்றிகளுக்காக, நம் தேவனுக்கு நன்றியை செலுத்தத் தவறிவிடக்கூடாது. அத்தோடு தரித்து நின்றுவிடாமல், புதிய இதயத்தோடும், புதிய சிந்தையோடும் இந்த ஆண்டில் தேவன் நமக்கென்று வைத்திருக்கும் ஒவ்வொரு காரியத் திலும், தேவ சித்தம் நிறைவேறும்படிக்கு நம்மை ஒப்புக் கொடுபோமாக. புதிய ஆண்டிலே புதிய காரியங்களை வாஞ்சிப்பர்களுக்கு பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவுரைகளில் சில: முற்றும் தேறினவனானேன் என்று ஒரு போதும் எண்ணிக் கொள்ள வேண்டாம். எப்போதும் மனந்தி ரும்புகின்ற இருதயமுள்ளவர்களாக வாழ வேண்டும். கிறிஸ்து இயேசு வினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேன் என்ற நோக்கத்தை மனதிலே பதியவையுங்கள். பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுங்கள். விசுவாசத்தைத் துவக்குகிற வரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்தி ருக்கிற ஓட்டத்தில் பொறு மையோடே ஓடக்கடவோம்;
ஜெபம்:
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; என்று கூறிய தேவனே, உம்முடைய பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, என் மனம் புதிதாக்கப்படும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:1-2