புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2023)

மனஉறுதியுடன் முன்னேறுவோம்

சங்கீதம் 46:11

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்


ஒரு வருடத்தைக் கடந்து இன்னுமொரு புதிய வருடத்திற்குள் நாம் காலடி வைத்துள்ளோம். கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, பலவிதமான எண்ணங்களும் உணர்வுகளும் மனதிலே தோன்றலாம். அவற்றில் சில மனதிற்கு இனிமையானவைகளாக இருந்திருக்கலாம். வேறு சில கசப்பான அனுபவங்களாக இருந்திருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு வருடத்தையும் நாம் கட க்கும் போது, தனி மனித வாழ்க் கையிலும், குடும்பம், உறவுகள், நண்பர்கள், சமுதாயம் மற்றும் தேச மட்டங்களிலே பல மாறுதல் களை காண்கின்றோம். உலகமானது நவீனமயப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று மனிதனானவன் பெருமிதம் கொள்கின்றான். மனித அறிவின் வளர்ச்சியும், மனிதனுடைய ஆக்கங்களும் முன்னொருபோதும் இல்லா தளவுக்கு பெரிய வளர்ச்சியை கண்டிருக்கின்றது என்றும், வாழ்க்கை தரமானது முன்னேற்றமடைந்திருக்கின்றது என்றும் மனிதனானவன், தன் ஆக்கங்ளைக் குறித்து மேன்மை பாராட்டுகின்றான். தான் உண்டு பண் ணின மாற்றங்கள் யாவும் நன்மையாவைகள் என்று தனக்குள் எண்ணிக் கொள்கின்றான். ஆனால், உலகத்திலே முன்னொருபோதும் இல்லாத துன்பங்களையும், துர்செய்திகளையும் நாம் செய்திகள் வாயிலாக அனு தினமும் அறிந்கொள்கின்றோம். இப்படியாக காலங்களும், மனிதர்களும், உலகின் போக்குகளும் மாறிக் கொண்டே போகின்றது. மனிதனுடைய வாழ்நாட்கள் எப்படி இருக்கின்றதோ அப்படியே அவனுடைய பெருமை யான பேச்சுக்களும் ஒரு கதையைப்போல் சீக்கிரமாய் முடிந்து போகி ன்றது. ஆனால், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நேற் றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார். காலங்கள் மாறிப்போ னாலும், மனிதர்கள் மாறிப்போனாலும், வானமும் பூமியும் அழிந்து போனா லும், அவர் நம்மைக் குறித்து கூறியிக்கின்ற வாக்குத்தத்தங்கள் ஒருபோ தும் மாறாதவைகள். விதைக்க ஒரு காலமுண்டு, விதைத்ததை அறுக்க ஒரு காலமுண்டு. கிறிஸ்து இயேசுவிலே நாம் படும் பிரயாசம் ஒருநாளும் வீணாகாது. இந்த உலகத்தின் வேஷம் சீக்கிரமாய் கலைந்து போகி ன் றது. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவ னவனுக் குப் பலனளிப்பார். எனவே, மாறாத கர்த்தராகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். கடந்த வருடத்திலும் இன்னுமதிகமாக செயற்ப டும்படியாக உங்களை மீட்பராகிய இயேசுவிடும் ஒப்புக் கொடுங்கள். சோர்ந்து போ காமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தை யும் அழியா மையையும் தேடுகிறவர்களுக்கு அவர் நித்தியஜீவனை அளிப்பார்.

ஜெபம்:

இதுவரை என்னை நடத்தி வந்த என் தேவனாகிய கர்த்தாவே, கடந்த ஆண்டிற்காக நன்றி. இந்த ஆண்டிலே உமக்குள் நான் இன்னும் அதிக உறுதியுடன் முன்னேறிச் செல்ல என்னை நீர் வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 21:33