புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2022)

எப்படி நன்றி சொல்லுவேன்?

சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே


என் பாவ சாபங்களினால் என் ஆத்துமா பாதாளத்திற்கு இறங்காத படிக்கும், என் பாவத்திற்குரிய தண்டனையை நான் பெற்று நிர்மூலமா காதபடிக்கும் அன்பின் தேவனாகிய கர்த்தர் என் அக்கிரமங்களை யெல்லாம் மன்னித்தார். மன உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ள கர்த்தர், தாழ்மையில் கிடந்த என்னை தமக் கென்று தெரிந்து கொண்டார். பூமி க்கு வானம் எவ்வளவு உயரமாயி ருக்கிறதோ, அவருக்குப் பயப்படு கிறவர்கள்மேல் அவருடைய கிரு பையும் அவ்வளவு பெரிதாயிருக்கி றது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ் வளவு தூரமோ, அவ்வளவு தூர மாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப் பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந் தவர்களுக்கு இரங்குகிறார். என் பரம தந்தையாகிய கர்த்தர் இப்படி யாக எனக்கு பெரும் கிருபையை பொழியும் போது, அதற்கு பதிலாக நான் என்ன செய்ய முடியும்? பிரியமானவர்களே, ஆண்டின் இறுதி நாளிலே நிற்கும் நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்நாட்களிலே, தேவ பிள்ளைகள் பல நன்மையான காரியங்களை நடப்பித்து வருகின் றார்கள். சிலர் உபவாசித்து ஜெபித்து, ஆண்டவர் இயேசுவின் பாதத் திலே தரித்திருந்து, நன்றி கூறி, அவருடைய வழிநடத்துதலுக்காக காத் திருக்கின்றார்கள். வேறு சிலர், பல தானதர்மங்களை செய்து, வறிய வர்களை விசாரிக்கி ன்றார்கள். இன்னும் சிலர், யுத்தங்கள், பஞ்சங் களினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அவர்களோடு இருந்து அவ ர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றார்கள். இவை யாவும் நன்மை யான ஈவுகள். தேவ னுடைய நன்மைகளை பெற்ற நான் என்ன செய்ய முடியும்? நான் தேவ சாயலிலே வளரும்படி தேவன் எனக்கு செய்ததை நான் மற்றவர்களுக்கு செய்ய முடியும். மன்னிப்புக்கு பாத்திரமற்றவ னாக இருந்த பாவியாகிய என்னைத் தேவன் மன்னித்து, தம்முடைய பிள்ளை என்று அழைத்தார். அந்தப் பிரகாரமாக நாமும் மன்னிக்க முடி யாதவர்களை மன்னிக்க முடியும். மனித பெலனத்தினால் அது கூடாத காரி யம். ஆனால் நாம் நம்மில் வாசம் பண்ணும் தேவ ஆவியானவரின் பெலனத்தினாலே இதை செய்து நிறைவேற்ற முடியும். அதனாலே நம் முடைய ஆத்துமா உண்மையுள்ள மனதோடு தேவனை ஸ்தோத்தரிக்கும். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாம த்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

ஜெபம்:

மன உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபை யுமுள்ள தேவனே, நீர் செய்த உபகாரங்களுக்காக நன்றி. நானும் உம் மைப் போல மாறும்படிக்கு எனக்கு உணர்வுள்ள உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:9-21